2009ல் வெளியான சஞ்சீவ் சுஜிதா சீரியல் bgmஐ காப்பி அடித்துள்ள செம்பருத்தி சீரியல்.

0
689
- Advertisement -

செம்பருத்தி சீரியலில் வந்த பிஜிஎம் பாக்கியராஜ் எழுதிய சீரியலோட பிஜிஎம் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்தது. அதிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருந்தது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும்.

-விளம்பரம்-

இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை கொண்டு எடுக்கப்பட்டது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா நடித்து இருந்தார். கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவலாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது.

- Advertisement -

செம்பருத்தி சீரியல்:

பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். பிறகு இவர் சினிமாவில் நடிக்க போவதாக அறிவித்தார். அதன் பின் இவருக்கு பதில் தொகுப்பாளர் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களை அடுத்து அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து இருந்தார்.

சீரியல் குறித்த தகவல்:

ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. அதோடு இந்த சீரியல் 1400 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. சமீபத்தில் தான் அனைவரும் எதிர்பார்த்த கிளைமேக்ஸ் வந்தது. மேலும், கிளைமாக்ஸ் எபிசோட் மட்டும் பல மணி நேரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒளிபரப்பாகி இருந்தது. இறுதியில் வில்லிகள் நந்தினி, வனஜா ஆகியோர் இறப்பது போல காட்டப்பட்டது. பின் செம்பருத்தி சீரியல் முடிந்தபின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கொண்டாடும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

விளக்கு வச்ச நேரத்துலே சீரியல்:

இந்நிலையில் செம்பருத்தி சீரியல் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, செம்பருத்தி சீரியலில் ஆதி- பார்வதி ஜோடி வரும் போதெல்லாம் ஒரு அழகான பிஜிஎம் வரும். இந்த தான் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக சீரியலை கவர்ந்தது. ஆனால், இந்த பிஜிஎம் சஞ்சீவ் -சுஜிதா நடித்த விளக்கு வச்ச நேரத்துலே சீரியலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியில் சஞ்சீவ்- சுஜிதா நடித்த விளக்கு வச்ச நேரத்துல சீரியல் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

சீரியல் பிஜிஎம்:

இந்த சீரியலை ரங்கநாதன் இயக்கி இருந்தார். இந்த சீரியலுக்கு பாக்யராஜ் தான் கதை வசனம் எழுதி இருந்தார். இந்நிலையில் இந்த சீரியலில் சஞ்சீவ்- சுஜிதா வரும் காட்சியின் போதெல்லாம் ஒரு அழகான பிஜிஎம் வரும். அதை தான் சமீபத்தில் முடிவடைந்த செம்பருத்தி சீரியலில் பார்வதி – ஆதி வரும்போது வைத்து இருக்கிறார்கள். தற்போது இந்த இரண்டு சீரியல்களின் பிஜிஎம் வீடியோ தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement