அடுத்த மாசம் குழந்தை பிறக்க போகுது – கர்ப்பமாக இருப்பதை அறிவிக்க திருமண நாள் வரை காத்திருந்த செம்பருத்தி சீரியல் நடிகை.

0
652
barathanaidu
- Advertisement -

வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் மக்கள் அதிகம் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியலில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல். இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும்.பெரும் வெற்றிகண்ட இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது.

-விளம்பரம்-

இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடித்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி தொடர் இருந்தது. செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானாவுக்கு ஜோடியாக ஆபிஸ் சீரியலில் புகழ்பெற்ற கார்த்திக் ராஜ்நடித்து இருந்தார். இவர்கள் இருவரின் கெமிஸ்டரி வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

ஆனால், கார்த்தி இந்த தொடரில் இருந்து வெளியேறியதும் தொகுப்பாளர் அக்னி, கார்த்தியாக நடித்து வந்தார். செம்பருத்தி தொடரில் ஹீரோ, ஹீரோயினுக்கு இருவருக்கு நிகராக செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவின் உண்மையான பெயர் பரதா நாயுடு. இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் முடித்துள்ளார்.

எல்லாரும் செய்வதைப் போல் இவரும் மாடலிங்கில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் 2011 ஆம் ஆண்டு பாஸ்கர் இயக்கத்தில் வெளியான ‘தேன் மிட்டாய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், 2017-ம் ஆண்டு வெளியான ‘நிரஞ்சனா’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இப்படி இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை. இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது செம்பருத்தி சீரியல் தான். இப்படி ஒரு நிலையில் இவர் பரத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இருந்தது. திருவண்ணாமலையில் எளிமையாக நடைப்பெற்றது.

லாக் டவுனில் நடந்த திருமணத்தை தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. எப்படி ஒரு நிலையில் தன்னுடைய மூன்றாம் ஆண்டு திருமண நாளில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருக்கிறார் வரதா நாயுடு இந்த செய்தியை மகிழ்ச்சியுடன் தான் அறிவிப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் எங்களின் குழந்தை மிகவும் பாதுகாப்புடன் இந்த உலகத்திற்கு வந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்

Advertisement