’16 திருப்பங்கள், 4 மணிநேரங்கள்’ செரும்பருத்தி கிளைமாக்ஸ் எப்படி இருக்கப் போகுது தெரியுமா ?

0
1594
sembaruthi
- Advertisement -

செம்பருத்தி சீரியலின் கிளைமாக்ஸ் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். இதனால் சின்னத்திரை நடிகர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருக்கிறது.

-விளம்பரம்-
sembaruthi

மேலும், இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை கொண்டு எடுக்கப்பட்டது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா நடித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சூரரை போற்றுவில் இவருக்கு தேசிய விருது கிடைச்சி இருக்கனும் – நடிகை குஷ்பூவின் ஆதங்க பதிவு. (யார சொல்றாரு பாருங்க)

செம்பருத்தி சீரியல்:

கார்த்திக் ராஜ் -ஷபானா இருவரின் கெமிஸ்ட்ரி வேற லெவலாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். பிறகு இவர் சினிமாவில் நடிக்க போவதாக அறிவித்தார். மேலும், இவருக்கு பதில் தொகுப்பாளர் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:

இவர்களுடைய ஜோடியும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. இடையில் கொஞ்சம் டல்லாக சென்றது. மேலும், இந்த சீரியல் 1400 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. சமீப காலமாக சீரியல் விறுவிறுப்பு இல்லாமல் செல்வதால் ரசிகர்கள் தொடரை முடித்துவிடலாம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

செம்பருத்தி சீரியல் குறித்த தகவல்:

இதனால் அகிலாண்டேஸ்வரி பார்வதியை ஏற்றுக்கொண்டார். இப்படி கிளைமேக்ஸை நோக்கி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடர் தற்போது 1420க்கும் மேற்பட்ட எபிசோடு கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த தொடர் விரைவில் இறுதி கட்டத்தை எட்ட உள்ளதாக கடந்த கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதாவது, ஜூலை 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது. தொடர்ந்து 4 மணிநேரம் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

சீரியலின் கிளைமாக்ஸ்:

இதன் பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டமும் நடைபெற உள்ளது. ஜீ தமிழின் எண்ணற்ற நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் சேனல் பல புதிய தொடர்புகளை களமிறங்கியிருக்கும் நிலையில் அனைவரின் விருப்பமான செம்பருத்தி சீரியல் முடிவடைய உள்ளது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். சீரியலின் கிளைமாக்ஸ் எப்படி இருக்க போகிறது? என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement