கார்த்தி சென்றதால் TRPல் மரண அடி வாங்கியுள்ள செம்பருத்தி – மற்றோரு சீரியல் நடிகரை களமிறங்கிய சீரியல் குழு.

0
2775
karthi
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-3.jpg

அதே போல barcindia என்ற வலைதளத்தில் வாரம் தோறும் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வரும் டிவி நிகழ்ச்சிகளில் TRP ரேட்டிங் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர் . அந்த வகையில் கடந்த மார்ச் 21 முதல் 26 வரையிலான தேதிகளில் Trp ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த தமிழ் தொலைக்காட்சி பட்டியலில் முதல் இடத்தில் சன் டிவி ரோஜா சீரியல் இடம்பெற்றுள்ளது. அதே போல டாப் 5 சேனலில் சன் டிவி தான் அதிக TRP புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

- Advertisement -

சன் தொலைக்காட்சியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இப்போது டிரெண்டிங்கில் போய்க்கொண்டிருக்கும் சீரியலில் ரோஜா சீரியல் தான் பட்டையை கிளப்புகிறது. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியங்காவிடம், ரோஜா சீரியலுக்கு தற்போது எந்த சீரியல் போட்டியாக டப் கொடுக்கிறது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா, செம்பருத்தி சீரியல் தான் என்று கூறி இருந்தார்.

ஆனால், செம்பருத்தி சீரியல் கடந்த வாரம் TRP லிஸ்டில் கூட இல்லை. இந்த சீரியலில் கார்த்தி இருந்த வரை இந்த சீரியல் வேற லெவல் TRP யில் சென்று கொண்டு இருந்தது. ஆனால், இந்த சீரியலில் இருந்து கார்த்தி எப்போது விலகினாரோ அப்போதே இந்த சீரியலின் வரவேற்பும் குறைந்தது. இதனால் இந்த சீரியலில் புது புது கதாபாத்திரத்தை இணைத்து வருகிறது சீரியல் குழு. இந்த சீரியல் 1000வது எபிசோடை எட்டியுள்ள நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ செம்பருத்தி சீரியலில் இணைந்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement