செம்பருத்தி சீரியலில் மீண்டும் இணைந்த நடிகை – யார்னு தெரியுமா ?

0
1747
sem
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கார்த்திக் வெளியேறி தற்போது அவருக்கு பதிலாக behindwoods தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார். கார்த்திக் வெளியேறிய சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி நீக்கப்ட்டு இருந்தார். அதே போல இந்த சீரியலில் ஆதியை ஒருதலை பட்சமாக காதலிக்கும் உமா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபரும் நடித்து வந்தார். ஆனால்,எ அவரையும் சில மாதங்களாக சீரியலில் காண முடியவில்லை.

இதையும் பாருங்க : நிர்வாண புகைப்படத்தை கேட்ட ரசிகர் – புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே அனுப்பிய புகைப்படம்.

- Advertisement -

கடந்த 25-ம் தேதி சென்னையில் ஒரு கோயிலில் வைத்து எளிமையான முறையில் ஜெனிபருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணம் ‘மதங்களைக் கடந்த காதல் திருமணம் என்பதும் குறிப்பிடதக்கது. அதிலும் ஜெனிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒரு கார் ஓட்டுநர் என்பது தான் மிகவும் ஆச்சரியம். இப்படி ஒரு நிலையில் செம்பருத்தி சீரியலில் நடிகை ஜெனிபர் மீண்டும் இனைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்த்திக் விலகினரா? இல்லை நீக்கப்பட்டாரா ? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி நீக்கப்ட்டு இருந்தார். அதன் பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜனனியிடம், செம்பருத்தி சீரியலில் இருந்து யாரை மாற்ற வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்திருந்த ஜனனி, நான் ஆதியை தான் சொல்வேன். அவருக்கு சீரியலில் நடிக்க ஆசை இல்லை, படங்களில் நடிக்க தான் ஆசை என்று கூறி இருந்தார். தற்போது அவர் சொன்னது போலவே தான் கார்த்தி இந்த சீரியலில் இருந்து வெளியேறி படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாரோ என்னவோ.

-விளம்பரம்-
Advertisement