கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்துல நான் என் மனசுல பட்டதைத்தான் சொன்னேன் – செம்பருத்தி சீரியல் நடிகை.

0
572
lakshmi
- Advertisement -

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சம்பவம் தொடர்பாக செம்பருத்தி வனஜா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் முழுவதும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டு இருந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான். கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து இருந்தார். கடந்த ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் இரண்டாவது மாடியில் இருந்து ஸ்ரீமதி மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார்.

-விளம்பரம்-

அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறப்படுகிறது. ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள்.

- Advertisement -

ஸ்ரீமதி மரணம்:

தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டிருந்தது. மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாணவியின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்து இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளியில் இருந்து சில நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நடிகை லட்சுமி அளித்த பேட்டி:

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் ஸ்ரீநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக செம்பருத்தி சீரியல் நடிகை லட்சுமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. நான் ஸ்ரீமதி விஷயத்தை கமர்சியலாக பார்க்கவில்லை. நாம் சொல்கிற கருத்தை ஆயிரம் பேர் பார்த்தாலும், அதில் 100 பேர் கேட்டாலும் போதும் என்று தான் நான் ஸ்ரீமதி குறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தேன்.

-விளம்பரம்-

ஸ்ரீமதி மரணம் குறித்து சொன்னது:

இதுவரைக்கும் ஸ்ரீமதி கூட படித்த பிள்ளைகள் யாருமே ஏன் எதுவும் சொல்ல தயங்குகிறார்கள்? தவறு நடந்தால் அதை தயங்காமல் வெளியே வந்து சொல்லுங்கள். இனி ஒருத்தருக்கும் இப்படி ஒரு நிலைமை நடக்கக் கூடாது. அதேபோல் குழந்தை ஒரு விஷயத்தைச் சொல்லும்போது பெற்றோர்கள் அதை அசிங்கம், அவமானம் என்று சொல்லாதீர்கள், நினைக்காதீர்கள். பார்ப்பவர்களுக்கு அது ஒரு நாள் நியூஸ் மட்டும் தான். அதனால் பாதிக்கப்படப்போவது நம்முடைய குழந்தைகள் தான்.

sreemathi

லட்சுமி சொன்ன அறிவுரை:

முதலில் குழந்தைகளிடம் எதையும் மூடி மறைக்க கூடாது என்று சொல்லிக்கொடுங்கள். அவர்களுக்குள் இருக்கும் பயத்தை போக்குங்கள். பள்ளி விட்டு வந்ததும் இன்று வகுப்பில் என்ன நடந்தது என்று பொறுமையாக பிள்ளைகளிடம் கேளுங்கள். குழந்தைகளுக்கு எல்லா விஷயத்தையும் எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள். தைரியமாக இருக்கச் சொல்லிக் கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி லட்சுமி கூறியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

லட்சுமி சின்னத்திரைப்பயணம்:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லட்சுமி. இவர் ஊர் வம்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். திருமணத்திற்கு பின் இவர் கொஞ்சம் சீரியலில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டாலும் சமீபத்தில் முடிவடைந்த செம்பருத்தி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் வனஜாகவே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பேரன்பு என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டு வருகிறார்.

Advertisement