செம்பருத்தி சீரியல் மித்ராவிற்கு திருமணமா ? இவர் தான் மாப்பிள்ளையை ? வைரலாகும் புகைப்படம்.

0
34191
mithra
- Advertisement -

தற்போது இருக்கும் கால கட்டங்களில் வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள். மேலும், அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ராமன் நடிக்கிறார்.

-விளம்பரம்-

செம்பருத்தி சீரியலை தமிழில் இயக்குபவர் ராம் முருகதாஸ், சுலைமான் ஆகும். திரைக்கதை எழுதியவர் சபரிநாதன் ஆவர். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது. அதுவும் செம்பருத்தி சீரியல் என்றால் சாப்பிட கூட மாட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது. மேலும்,செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானாவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆபிஸ் சீரியலில் புகழ்பெற்ற கார்த்திக் ராஜ் தான். அதுமட்டும் இல்லாமல் சின்னத்திரையில் கார்த்திக்கை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சீரியலில் மிகப் பிரபலமான ஹீரோ. மேலும்,செம்பருத்தி சீரியலில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் உள்ளது.

இதையும் பாருங்க : கடற்கரையில் பிகினி உடைகளில் போஸ் கொடுத்த கொலைகாரன் பட நடிகை.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவர்கள் ஜோடிக்காகவே ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. அகிலா என்ற பணக்கார பெண்ணின் மகன் ஆதித்யா. பார்வதி அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண். இந்நிலையில் பணக்கார பையனுக்கும், வேலைக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட காதலால் ஏற்படும் திருப்பங்களையும், பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு குடும்பம் தொடர் ஆகும். இந்நிலையில் செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் மித்ராவின் உண்மையான பெயர் பாரதா நாயுடு. இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். மேலும், இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் முடித்துள்ளார். எல்லாரும் செய்வதைப் போல் இவரும் மாடலிங்கில் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் 2011 ஆம் ஆண்டு பாஸ்கர் இயக்கத்தில் வெளியான ‘தேன் மிட்டாய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

View this post on Instagram

#Sembaruthi Serial Actress Mithra

A post shared by Behind Talkies (@behindtalkies) on

இதனைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், 2017-ம் ஆண்டு வெளியான ‘நிரஞ்சனா’ படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இப்படி இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மித்ராவின் போட்டோ சூட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும்,இது மித்ராவின் கல்யாண சம்பந்தமான புகைப்படங்களாக இருக்குமோ? என்ற தகவலும் கூறுகிறார்கள். அதோடு இந்த புகைப்படத்தில் இருப்பவர் மித்ராவின் காதலனாக இருப்பாரா? என்றும் இது போட்டோ ஷூட் செய்த புகைப்படமா? என்றும் பல கேள்விகளை இணையதளங்களில் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால், இன்னும் வரை இது குறித்து பாராத நாயுடு எந்த ஒரு பதிலையும் கூறவில்லை.

-விளம்பரம்-
Advertisement