மேடையில் விஜய்யிடம் காதலை சொல்ல சொன்ன தொகுப்பாளர்.! ஆனால், ஷபானா செய்ததை பாருங்க.!

0
3022
Sabhana
- Advertisement -

சின்னத்திரை நடிகைகளில் ஒரு சிலர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஷபானா ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். மலையாள சீரியல்களில் நடித்து வந்த இவர் பின்னர் தமிழ் சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்பதை பல முறை பல பேட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இவர் நடித்த செம்பருத்தி சீரியலின் மூலம் கடந்த ஆண்டின் பிரபலமான நடிகை என்ற விருதினை பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த விழாவில் தொகுப்பாளராக பிளாக் ஷீப் விக்னேஷும், ரியோ ராஜும் பங்குபெற்றனர்.;

இந்த விழாவின் விழாவின் போது விருதை வாங்க மேடைக்கு வந்த ஷாபனாவிடம் ஆர் ஜே விக்னேஷ், விஜய் புகைப்படத்தை திரையில் காட்டினர். அப்படி காட்டியதும் அரங்கமே சில நொடிகள் ஆராவாரத்தில் மூழ்கியது. பின்னர் ஆர் ஜே விக்னேஷ், ஷபானாவிடம், நீங்கள் விஜய்யின் தீவிர ரசிகை என்பது தெரியும். அதனால் ரசிகர்கள் சார்பாக நீங்கள் விஜய்க்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று கூறினார்.

-விளம்பரம்-

சிறிது நேரம் நெகிழ்ந்த ஷபானா அவர் அண்ணன் மாதிரிங்க அவரை போய் எப்படி ப்ரொபோஸ் செய்வது என்று கூறியதோடு தரையை தொட்டு விஜய் புகைப்படத்தை கும்பிட்டு ஆசிர்வாதம் பெற்றார். இதனை கண்டு நெகிழ்ச்சியில் ஆழந்த ரசிகர்கள் மேலும் கரகோசத்தை எழுப்பி கூச்சலிட்டனர்.

Advertisement