வெள்ளி திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள்.
மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது.அதுவும் செம்பருத்தி சீரியல் என்றால் சாப்பிட கூட மாட்டார்கள்.அந்த அளவிற்கு ரசிகர்களை கொண்ட சீரியல். மேலும் இந்த செம்பருத்தி சீரியலில் நடிக்கும் நடிகை ஷபானா அவர்கள் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆனால், இவர் பிறந்து, வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். அதுமட்டும் இல்லாமல் இவர் முதலில் மலையாள சீரியலில் தான் நடித்து உள்ளார். அதற்குப் பின்னர் தான் இவருக்கு தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும்,செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானாவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஆபிஸ் சீரியலில் புகழ்பெற்ற கார்த்திக் ராஜ் தான்.
அதுமட்டும் இல்லாமல் சின்னத்திரையில் கார்த்திக்கை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு சீரியலில் மிகப் பிரபலமான ஹீரோ. மேலும்,செம்பருத்தி சீரியலில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரியும் வேற லெவல். அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவர்கள் ஜோடிக்காகவே ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. மேலும்,செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் இடையே பயங்கர வரவேற்பு கொடுத்தது என்று சொல்லலாம். மேலும்,செம்பருத்தி சீரியலில் ஜோடியாக இருக்கிற கார்த்திக்,ஷாபனாவை நிஜத்திலும் ஜோடி ஆக மாற வேண்டும் என பல ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இது குறித்து பல கருத்துக்களையும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த கருத்து குறித்து நடிகை சபானாவிற்கும் ஆசை இருக்கிறதா?? என்று பல கருத்துக்கள் இணையங்களில் வருகின்றன.
மேலும், இது குறித்து நடிகை ஷபானா விடம் கேட்டபோது அவர் கூறியது,நடிகர் கார்த்திக்கை காதலிக்கிறீர்களா? என்று என்னிடம் பல பேர் இப்படி கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இந்த கேள்விக்கு எனக்கு எப்படி பதில் சொல்வது என தெரியவில்லை, ஆனால், ‘அவருடன் காதல் உள்ளது என்றும் சொல்ல மாட்டேன், இல்லை என்றும் சொல்ல மாட்டேன்’ என மழுப்பிய வாரே நடிகை ஷபானா பதில் கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் நடிகர் கார்த்திக் ராஜ் அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவர். மேலும்,கார்த்திக் ராஜும்,அவருடைய மனைவிக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இந்த நிலையில் நடிகை ஷபானா கூறியதை கேட்டு கார்த்திக் என்ன சொல்லுவார்? என்று தெரியவில்லை. மேலும்,நடிகை சபானா மனதில் காதல் இருக்கிறதா? இல்லையா? என்று புரியாத புதிராக போட்டு விட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மனம் திறந்து சொன்னால் தான் தெரியும். ஆனால், இவர்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர வேண்டும் என பல பேர் ஆசைப்படுகிறார்கள்.