செம்பருத்தி சீரியல் நடிகர் வீட்டில் குவா குவா. குழந்தையின் புகைபடத்தை வெளியிட்ட நடிகர்.

0
90187
sembharuthi-shyam
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது சொல்லலாம். ஏனென்றால் வெள்ளித்திரையை விட அந்தளவிற்கு சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம். அதிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “செம்பருத்தி” சீரியல் தான் இப்போது இருக்கும் சீரியல்களில் டாப் சீரியல். அதுமட்டும் இல்லாமல் செம்பருத்தி சீரியலுக்கு என ஒரு ரசிகர் படை உள்ளது.மேலும்,இந்த செம்பருத்திசீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு கழிக்கும் வகையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து செம்பருத்தி சீரியல் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எல்லா எபிசோடுகளும் விருவிருப்பான காட்சிகளும், எதிர்பாராத சுவாரசியங்கள் நிறைந்ததாக உள்ளது. எப்போதும் ஒரு சீரியல் வந்த உடன் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருக்கும்.

-விளம்பரம்-
Image result for sembaruthi serial shyam"

பின் நாட்கள் செல்லச் செல்ல சீரியல் போர் அடித்து விடும். அதற்கு பின்னால் அந்த சீரியலை பார்ப்பதை விட்டு விடுவார்கள். ஆனால்,அந்த கருத்தையே பொடி பொடியாக மாற்றி விட்டது செம்பருத்தி சீரியல். மேலும்,செம்பருத்தி சீரியல் மட்டும் தான் ஆரம்பத்திலிருந்து இன்று வரை ரசிகர்கள் ரசித்துக் கொண்டே உள்ளார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு கதையின் சுவாரசியமம்,விறுவிறுப்பும் எள்ளளவும் குறையவில்லை. அதுமட்டுமில்லாமல் செம்பருத்தி சீரியலில் வரும் ஆதி,பார்வதி கதாபாத்திரங்களை மக்கள் அவர்கள் வீட்டுப் பிள்ளையாகவே பாவிக்க தொடங்கினார்கள். மேலும், இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் “ஆதி, பார்வதி, அகிலாண்டேஸ்வரி” தான்.அதுமட்டும் இல்லாமல் இவர்கள் மூவரும் தான் இந்த சீரியலின் தூண்கள் என்றும் சொல்லலாம்.

- Advertisement -


இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் சீசன் 7-ன் வெற்றியாளர் இவர் தான். 3 ஆம் இடத்தில் இரண்டு போட்டியாளர்கள்.

இந்த செம்பருத்தி சீரியல் ஏற்கனவே தெலுங்கில் ‘முத்த மந்தாரம்’ என்ற தலைப்பில் உருவானதாகும். மேலும்,இந்த சீரியலை தான் தமிழில் செம்பருத்தி என்று ஒளிப்பரப்பு செய்கிறார்கள். மேலும், செம்பருத்தி சீரியலில் ஆதியின் நண்பராக நடித்திருந்தவர் முன்னாள் ஷ்யாம். நடிகர் ஷ்யாமின் உண்மையான பெயர் சைப் அலிகான். ஆனால், சில காரணத்தினால் அவர் திடீரென்று சீரியலை விட்டு விலகினார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா சீரியல் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. சீரியல் ஆதியின் நண்பராக நடித்து வந்திருந்த ஷாம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வந்தவர்.

-விளம்பரம்-

நடிகர் ஷ்யாம் அவர்கள் செம்பருத்தி சீரியலில் ஏதாவது நகைச்சுவை, கலாட்டா என பண்ணிக் கொண்டு தான் இருப்பார். மேலும், சீரியலையும் கலகலப்பாகவே வைத்துக் கொண்டு இருப்பார். ஆனால்,ஷ்யாம் அவர்கள் சீரியல் விட்டு விலகியதற்கு காரணம் இன்று வரை தெரியாமல் இருக்கிறது. ஏன்?இப்படி ஷ்யாம் அவர்கள் பற்றி பேசிட்டு வருகிறோம் என்று பார்த்தால், சில மாதங்களுக்கு முன் ஷ்யாம் அவர்களின் மனைவி வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வந்து இருந்தது. அதில் ஷ்யாம் அவர்கள் ‘நான் அப்பாவாக போகிறேன் ‘ என்ற சந்தோஷமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் ஷாம் என்கிற சைப் அலிகானுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது. மேலும்,சைப் அலிகான் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கையில் உள்ள குழந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும்,அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. மேலும்,தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று சந்தோஷமாக இருந்தார் ஷ்யாம். மேலும், இந்த சந்தோசத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

Advertisement