பிக் பாஸ்’ வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளர், சென்றாயன். கஞ்சா கருப்பும் பரணியும் கலந்த கலவையாக, `பிக் பாஸ்’ வீட்டில் வலம்வருவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். `பிக் பாஸ்’ வீட்டில் முதல் நாள் இருந்த சென்றாயனுக்கும், இப்போதிருக்கும் சென்றாயனுக்கும் நிறைய வித்தியாசங்கள். முதலில், அனைவரிடமும் சகஜமாகப் பழகிக்கொண்டிருந்தவர், இப்போது ஒவ்வொருவரின் சுயத்தையும் தெரிந்துகொண்டு உஷாராகப் பேசுகிறார்.
கடந்த வாரம் கைவிடப்பட்ட குழந்தைகள், `பிக் பாஸ்’ வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். அகம் டிவி வழியாக கமலிடம் பேசிய சென்றாயன், “நான்கு வருடங்களாக எங்களுக்குக் குழந்தை இல்லை. `பிக் பாஸ்’ வீட்டிலிருந்து வந்தவுடன் ஒரு குழந்தையைத் தத்தெடுப்போம்” எனச் சொல்லியிருந்தார். இதுகுறித்து, மனைவி கயல்விழி சென்றாயனிடம் பேசினோம். அப்போது தான் கற்பமபாக இருப்பதாக கூறி நமக்கு ஷாக் கொடுத்தார். மேலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றிய சில கேள்விகளும் கேட்கப்பட்டது.
பிக் பாஸ் போட்டியாளர்களை பற்றி சென்றாயனின் மனைவி கூறிய கருத்து.
டேனி :- டேனி என்னுடைய கணவருக்கு ஒரு கடினமான போட்டியாளராக இருப்பார். ஆனால், சில இடத்தில் கொஞ்சம் போலியாக தெரிகிறார். அதை மட்டும் அவர் சரி செய்து கொள்ளவேண்டும்
ஷாரிக்:- வயது கோளாறு கொஞ்சம் அதிகமாக உள்ளது.அதனை கொஞ்சம் குறைத்து கொள்ள வேண்டும் .
மும்தாஜ்:- அவர் பேசுவதெல்லாம் சரியாக தான் இருக்கிறது. ஆனால், எப்போது அவர் கோவத்தில் வெடிக்கிறார் என்று தான் தெரியவில்லை. அதனால் அவரை அதை மட்டும் குறைத்துகொள்ள வேண்டும்.
பொன்னம்பலம்:- ஒரு அப்பாவாக அவர் தான் வீட்டில் உள்ள அனைவரையும் வழி நடத்த வேண்டும். கெட்ட வார்த்தை பயன்படுத்தாமல் எப்படி சொல்லி புரியவைக்க வேண்டுமோ, அப்படி புரிய வைக்க வேண்டும்.
ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா:- இவர்கள் இருவரிடமும் சொன்னாலும் கேட்டுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுடைய வயது அப்படி. ஆனால், இருவரும் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளவேண்டும்.