ஐஸ்வர்யாவை திட்டித்தீர்த்த சென்ராயன் மனைவி கயல்..! என்ன சொன்னார் தெரியுமா..?

0
516

பிக் பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா ‘சர்வாதிகார ராணி ‘ என்ற அறிவிக்கப்பட்ட பின்னர் அவரது அட்டுழியங்கள் தாங்க முடியவில்லை. சமீபத்தில் பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியது, சென்றாயன் குடித்து கொண்டிருந்து டீயை பிடிங்கி கீழே ஊற்றியது போன்ற செயல் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்திலும் மிகப்பெரிய விவாதமாக மாறி இருந்தது.

actor senrayan

- Advertisement -

இதுகுறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.அதே போல பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்களிடமும் சில பேட்டிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில்
சென்றாயனின் மனைவி கயல்விழியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது ஐஸ்வர்யா, ராணியாக இருந்த போது செய்த சில செயல்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கயல்விழி, ஐஸ்வர்யா செய்த செயல்கள் கொஞ்சம் கேவலமாக தான் இருந்தது, பாலாஜி அண்ணா மீது குப்பையை கொட்டியது ரொம்ப தப்பு. பாலாஜி அண்ண ரொம்ப நல்லவர்’ என்று தெரிவித்தார்.அதே போல ஐஸ்வர்யா ஓவியவாக மாற நினைக்கிறாரோ என்று கேள்விக்கு சற்று கோவத்துடன் பதிலளித்த கயல்விழி ‘ஓவியா எங்க இவங்க எங்க, அவருக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ரசிகர்கள் இருகாங்க. ஆனா, ஐஸ்வர்யா செஞ்ச விஷயம் எல்லாம் மக்களுக்கு கொஞ்சம் எரிச்சலாக தான் இருந்திருக்கும்.அவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருந்திச்சோ இப்போ ஐஸ்வர்யாவ அந்த அளவுக்கு மக்கள் வெறுக்கிறாங்க. இதெல்லாம் நான் சோசியல் மீடியால பாத்து தெரிஞ்சிகிட்ட ஐஸ்வர்யா எல்லாம் ஓவியாவாக மாறா முடியாது’ என்று சற்று காட்டத்துடன் பதிலளித்திருந்தார்.

-விளம்பரம்-

Bigg-Boss

கயல்விழி இப்படி கூறியதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் பேவரட்டாக இருந்து வந்தது ஓவியா தான். அதே போல ஜூலி தான் ரசிகர்கள் அதிகம் வெறுத்த நபராக இருந்து வந்தார். இருப்பினும் ஐஸ்வர்யா செய்து வருவதை பார்க்கும் போது ஜூலி எவ்வளவோ தேவலாம் என்று தான் தோன்றுகிறது. ஜூலிக்கும், ஓவியாவிற்கும் கொஞ்சம் முட்டிக்கு கொண்ட போதும் இருவரும் கீழ் தனமாக ஒருவரை ஒருவர் பழி வாங்கி கொள்ளவில்லை.

மேலும், கடந்த ஆண்டு பிக் பாஸ் ஓவியா மற்றும் ஜூலிக்கு ரெட் கார்பட் டாஸ்க் கொடுக்கப்பட்ட போது கூட ஓவியா, ஜூலியை பழி வாங்கினார். ஆனால், அதனை காணும் போது அவ்வளவு கீதரமான செயலாக மக்களுக்கு தோன்றவில்லை. ஆனால், ஐஸ்வர்யா பழி வாங்குவதாக எண்ணி தனக்கு ஆகாதவர்களை பழி வாங்கிய சில செயல்கள் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தான் ஏற்படுத்தியது.

மேலும் ஐஸ்வர்யா ராணியாக இருந்த போது பாலாஜி, ரித்விக்கா, சென்ராயன் ஆகியோரை தான் குறிவைத்து பழி வாங்கினார். அதிலும் சென்றாயனை தான் அதிகம் எரிச்சலூட்டினார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சென்ராயன், ஐஸ்வர்யாவை அடிக்க கை ஓங்கி விட்டார்.

Aishwarya-dutta

அதே போல இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா செய்தது போல சில செயல்களை செய்து மக்களை கவர முயற்சித்து வந்தனர். ஆனால், அதற்கு மாறாக ரசிகர்களுக்கு இவர்கள் இருவரும் செய்த செயல்களில் எரிச்சலை தான் ஏற்படுத்தியது.

Advertisement