நான்காண்டு கவலை நீங்கியது.! சென்ராயன் மனைவிக்கு குழந்தை பிறந்தது.! புகைப்படம் இதோ.!

0
2262
senrayan
- Advertisement -

நடிகர் சென்ராயன் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார். 

-விளம்பரம்-
Actor-senrayan

ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சென்ராயன் பின்னர் காமெடி நடிகராக வளம் வர துவங்கினார். நடித்த வட சென்னை படத்தில் நடித்திருந்தார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார்.

நான்கு வருஷத்துக்குப் பிறகு தன் மனைவி கர்ப்பமாக இருக்கிற செய்தி கேட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் துள்ளிக் குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நம் அனைவரையும் சிலிர்க்க வைத்தார் சென்றாயன். கர்ப்பமாக இருக்கும் தன் மனைவி ஆசைபட்டார் என்று அவருக்கு வளைகாப்பையும் நடத்தி சர்ப்ரைஸ் கொடுத்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் கயல்விழிக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்ராயனுக்கும் அவருடைய மனைவி கயல்விழிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement