போட்டி போட்டுகொண்டு பணத்தை வாரி வாரி கொடுத்த ரசிகர்கள் – துள்ளி துள்ளி குதித்து ஓயாமல் பணத்தை வாங்கி வாங்கி போட்ட ராஜலக்ஷ்மி.

0
898
Senthilganesh
- Advertisement -

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is raja333-1024x655.jpg

அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.

- Advertisement -

சூப்பர் ஹிட் அடித்த ‘வாயா சாமி’ பாடல் :

தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது.

பெரும் பிரபலமான புஷ்பா பாடல் :

அதே போல ”வாயா சாமி ” பாடலை செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள். அந்த வீடியோ செம்ம வைரலானது. சமீபத்தில் கூட சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாட்டு பாடி வாக்கு சேகரித்து இருந்தார்கள். தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஆளே மாறிய நாட்டுப்புற பாடகர்கள் :

தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்கள், ரசிகர்களுடன் உரையாடல் என அனைத்தையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். சமீப காலமாக இவர்கள் இருவரின் புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் செய்யும் சிறிய விஷயங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் இணைந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தனர்.

குவிந்த பணம் :

சமூக வலைதளத்தில் தினமும் எதாவது ஒரு வீடியோவை போட்டு தள்ளி வரும் இந்த தம்பதி சமீபத்தில் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றிலும் நடித்து இருந்தனர். இப்படி டிவி, சினிமா என்று பிரபலமானாலும் மேடை நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் இவரும் விழா ஒன்றில் பாடய போது ரசிகர்கள் சிலர் போட்டி போட்டுகொண்டு பணத்தை அள்ளி அள்ளி கொடுத்துள்ளனர், அதை துள்ளி குதித்த வாறு வாங்கி வாங்கி போட்டுள்ளார் ராஜலட்சுமி.

Advertisement