மீண்டும் பிரபல நடிகரின் படத்தில் பாடப்போகும் செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர்.! எந்த படம் தெரியுமா.!

0
1711
Senthil-rajalakshmi
- Advertisement -

விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதி போட்டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் செந்தில் கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

-விளம்பரம்-
Senthil-Ganesh

இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இந்த தம்பதியினர் பிரபு தேவா நடிப்பில் வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ என்ற பாடலை பாடி இருந்தனர். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி படு ஹிட்டானது.

- Advertisement -

அதன் பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் பாடி வருகின்றனர். சமீபத்தில் கூட செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மீண்டும் இணைந்து ஒரு புதிய பாடல் ஒன்றை பாடினார் . இயக்குனர் ராம் சிவா இயக்கி வரும்’ ஏன் காதலி சீன் போடு’ற என்ற படத்திற்கு ஆம்பூரில் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நில்லா கல்லுல’ என்ற பாடலை செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், இறுதி சுற்று இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்தில் செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் பாடப் போகின்றனராம். இந்த பாடலும் சின்ன மச்சான் பாடலுக்கு இணையாக வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

-விளம்பரம்-

Advertisement