புதிய அலுவலகத்தை திறந்த செந்தில்-ராஜலட்சுமி..!எதுக்குன்னு தெரிஞ்சா பாராட்டுவீங்க..!

0
1221
- Advertisement -

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர்கள் செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி. சமீபத்தில் நலிவடைந்த நாட்டுப்புறக்கலைஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக `அரிதாரம்’ எனும் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள் ராஜலெட்சுமி – செந்தில்கணேஷ் தம்பதியர்.

-விளம்பரம்-

senthil

- Advertisement -

கடந்த வாரம் `அரிதாரம்’ அமைப்பின் அலுவலகத் திறப்பு விழாவை கைத்தறிக் கலைஞர்கள், நெசவாளர்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் குடும்பத்தினரோடு சேர்ந்து பிரமாண்டமாக தொடங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து பேசியுள்ள ராஜலக்ஷ்மி, எங்களோட அடிப்படை நோக்கம் மூத்த கலைஞர்களுக்கு உதவி பண்றதுதான். ஏன்னா, நிறைய கலைஞர்கள் எந்த வருமானமும் இல்லாம அவங்க வாழ்வாதாரத்தையே தொலைச்சிட்டு கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கெல்லாம் மாதா மாதம் ஒரு தொகையைக் கொடுத்து உதவணும்.

-விளம்பரம்-

இளைஞர்கள்கிட்ட நாட்டுப்புறக்கலையை எடுத்துட்டுப் போகணும். அவங்க விரும்புற கலையைக் கத்துக்கிற மாதிரியான பயிற்சிப் பள்ளிகளை ஏற்படுத்தணும்.தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, கணியான்கூத்து மாதிரியான கலைகள்லாம் ராத்திரிதான் பண்ணுவாங்க. அவங்ககிட்ட பத்து நிமிஷம் கான்செப்ட் கொடுத்து பண்ணச் சொல்றது சாத்தியமில்லை. அதை எப்படிச் சீர்படுத்தி மக்கள்கிட்ட ஈஸியா கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்னு பார்க்கணும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசியுள்ள அவர் ,என் கணவர் செந்தில்கணேஷ் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நான் எதைச் சொன்னாலும் அவரு தட்டாம அதை ஏத்துப்பாரு. அரிதாரம் ஆரம்பிக்கிறதுக்கே மூணு லட்சம் செலவாகிடுச்சு. ஆனாலும், `இப்போ எதுக்குப் புள்ள இது. இதை வெச்சு நாம என்ன பண்ணப்போறோம். நாமளே இப்போதான் வளந்துட்டு வாரோம். இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா. கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாமே’ன்னு அவர் ஒரு வார்த்தைகூட சொல்லல. நான் என்ன கேட்டாலும் செஞ்சுக் கொடுத்திடுவாரு.

Advertisement