விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இரு இறுதி போட்டியில் படத்தை வென்றவர்கள் தான் செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி. தற்போது இவர்களுக்கு தொடர்ந்து சினிமாவில் படும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அது போக செந்தில் கணேஷ் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துவிட்டார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது ‘சின்ன மச்சான் சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் தான். இதுவரை இவர்கள் ஏறிய மேடைகளில் இந்த பாடலை இவர்கள் பாடாமல் இருந்ததே இல்லை. இதே பாடலை தான் சார்லி சாப்ளின் 2 படத்திலும் பாடியுள்ளனர்.
இந்த பாடலை மக்கள் பல முறை கேட்டிருந்தாலும் இந்த பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இணையதளத்தில் செம ட்ரெண்டான இப்பாடல் வெளியான போதே அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.
மேலும் கடந்த நவம்பர் 30 ம் தேதி தான் 50 மில்லியனை தொட்டது. இம்மாதத்தின் 3 தேதிகளிலேயே 1 மில்லியனை கூடுதலாக பெற்று அதுவும் கடந்த 29 ஆம் தேதி 2.0 வெளியான பின்னரும் இந்த சாதனையை படைத்துள்ளது.