செல்லமடி நீ எனக்கு, கல்யாண பரிசு என 50 சீரியல்களுக்கு மேல் நடித்த காயத்ரியின் தற்போதைய நிலை ?

0
440
Gayathri-Priya

நடிகைகள் என்றாலே அவர்களது திரை வாழ்க்கையை திருமணத்திற்குப் பிறகு மிகவும் கேள்விக்குறியாகி விடுகிறது. அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை யான காயத்ரி பிரியாவும் விதிவிலக்கல்ல. மலையாள நடிகையான இவர், தமிழில் ஆடுகிறான் கண்ணன், தீர்க்கசுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, கல்யாண பரிசு போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இதுவரை 50-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்த இவ,ர் ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் மலேசியாவில் செட்டிலாகிவிட்டார். இவரது கணவர் மலேசியாவில் இருந்த வங்கி ஒன்றில் கிளை அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.

இதையும் பாருங்க : இந்த வயதிலும் ரசிகர்களை சுண்டி இழுத்த கிரண்.! புகைப்படங்கள் இதோ.! 

திருமணத்திற்குப் பின்னர் சில வருடமாக சீரியல் இருந்து நடிப்பதை தவிர்த்து வந்தார் நடிகை காயத்ரி. இந்த நிலையில் தற்போது காயத்ரி கணவருக்கு சென்னை பணி மாறுதல் கிடைத்து சென்னைக்கு வந்துவிட்டார். இதனால் மீண்டும் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் காயத்ரி.

காயத்ரி பிரியா

முதற்கட்டமாக விரைவில் மலையாள தொடர்வண்டிகளும் தமிழ் தொடர் ஒன்றிலும் நடிக்க இருக்கிறாராம். இது குறித்து பேசிய காயத்திரி எல்லா பெண்களுக்கும் குடும்ப வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அதனால்தான் கடந்த நான்கு ஆண்டுகள் குடும்பத்திற்காக சீரியலில் இருந்து ஒதுங்கி விட்டேன். பிசியாக நடித்து வந்த நான் மலேசியாவில் ஒரு வீட்டுக்குள்ளே இருந்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது என்று கூறியுள்ளார்.