பயில்வான் ரங்கநாதனை நேரில் பார்த்தா அறையணும்னு தோணும் – வாணி ராணி சீரியல் நடிகர் ஆவேசம்.

0
451
Bayilwan
- Advertisement -

பயில்வான் ரங்கநாதனை குறித்து சீரியல் நடிகர் அருண் குமார் ராஜன் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்கள் வகையில் பிரபலமாக இருப்பவர் அருண் ராஜன். இவர் மயிலாடுதுறையை சேர்ந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரின் மூலம் தான் தொலைக்காட்சி துறைக்கு நடிகராக அருண் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் அழகி, வாணி ராணி, சந்திரலேகா, கல்யாண பரிசு, பிரியசகி, சந்திரகுமாரி, பூவே உனக்காக போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தொலைக்காட்சி நடிகர் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். பல நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனால் இவருக்கு பிரபலமான தொகுப்பாளர் என்ற விருதையும் வாங்கி இருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் 12 வருடத்துக்கு மேலாக மீடியாவில் இருக்கிறார்.

- Advertisement -

அருண் குமார் ராஜன் நடிக்கும் சீரியல்:

தற்போது இவர் கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கண்ட நாள் முதல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அருண் குமார் ராஜன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பயில்வான் ரங்கநாதன் குறித்து கூறியிருந்தது, சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டது ரொம்ப கேவலமான செயல்.

அருண் குமார் ராஜன் அளித்த பேட்டி:

எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு கசப்பான சம்பவம் நிகழ்ந்திருக்கும். அவர்கள் அவங்களோட சூழல் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஒரு பெண் மீடியாவில் இருந்தார்கள் என்றால் அவர்கள் என்ன கிள்ளுக்கீரையா? அவரோட பர்சனல் விஷயங்களை பொதுவெளியில் பேசுவது உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பேச்சு உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனால், அதற்கும் மீறி ஒருத்தருடைய பர்சனல் அதில் அடங்கி இருக்கும். மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஒருத்தரை மதிக்க தெரியவில்லை என்றாலும் அப்போ ஒதுங்கிப் போய் விடனும்.

-விளம்பரம்-

பயில்வான் ரங்கநாதன் குறித்து சொன்னது:

எந்தவிதத்தில் நீங்க உங்களை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? வாழ்க்கை ஓட்டத்தில் தப்பான கண்ணோட்டத்தில் பேசி உங்க பொண்ணை யாராவது சுட்டிக் காட்டினால் அதைக் கேட்டுட்டு அமைதியாக இருப்பீர்களா? எனக்கு ரொம்ப மனசு வலிக்குது. எல்லோரும் அசிங்கத்துக்கு மேல் கல் அடிக்க வேண்டாம் என்கிற மனநிலையில் ஒதுங்கி தான் நானும் போறேன். எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தப்பு பண்ணி இருப்பார்கள். பிறகு அந்த தப்பை உணர்ந்து அவர்களை சரிசெய்து விடுவார்கள். அதுதான் மனித வாழ்க்கை. ஆனால், இப்படிப் பேசுவது தனிமனிதனை மட்டும் பாதிக்காமல் அந்த குடும்பத்தையே பாதிக்கும்.

கோபத்தில் அருண் ராஜன் சொன்னது:

இன்றைக்கு அவர் கூட நடித்த சீனியர் நடிகர்கள் குறிப்பாக கவுண்டமணி சார் பற்றி எல்லாம் பேசுவது எப்படி சரியாக இருக்கும்? இந்த மாதிரி பேசி சம்பாதிக்கிற பணத்தில் எப்படி சாப்பிடுவது செரிமானம் ஆகிறது? என்று எனக்கு தெரியவில்லை. இப்படி பேசுவதால் எத்தனை பேருடைய மனசு உடைந்து இருக்கும். அப்படி ஒருவரை துன்புறுத்தி அதன்மூலம் கிடைக்கிற பணத்தை அவருடைய குடும்பம் சாப்பிடுவது என்றால் அது ஜீரணம் ஆகாது. அவரை நேரில் பார்த்தால் நான் கண்டிப்பாக அறைந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement