பால் திருட்டு, கண்ணாடி உடைப்பு, சீட் உடைப்பு, கதவிற்கு நாட்டு வெடி – ஆங்காங்கே அலப்பறைகள் செய்துள்ள அஜித் ரசிகர்கள்.

0
501
- Advertisement -

நீண்ட நாள்கள் எதிர்பார்த்து காத்து இருந்த வலிமை படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. ரசிகர்கள் எல்லோரும் பயங்கர உற்சாகத்தில் உள்ளார்கள். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் தல அஜித்தை வைத்து இயக்கி உள்ள படம் தான் வலிமை. இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தச் இந்திய சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வலிமை படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

மேலும், படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்திருக்கிறார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் சமாளித்து அஜித் எப்படி வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது.

- Advertisement -

வலிமை படத்தின் கதை:

வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா மிரட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆண்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் ஹூமா குரேஷி மாஸ் காட்டியிருக்கிறார். அதிலும் படத்தில் பஸ் பைட் தமிழ் சினிமாவிலேயே ஒரு மைல்கல் காட்சி என்று சொல்லுமளவிற்கு இயக்குனர் மிரட்டி இருக்கிறார். நீண்ட நாள் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு முழு பேக்கேஜாக வலிமை அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் திரையரங்கை அஜித் ரசிகர்கள் சேதம் செய்து உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள வலிமை படம்:

பிரம்மாண்டமாக வலிமை திரைப்படம் இன்று வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்திலும் கொண்டாட்டத்திலும் இருக்கிறார்கள். படத்திற்கான வரவேற்பு விமர்சனம் எல்லாம் அட்டகாசம் அமர்க்களமாக இருக்கிறது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் நல்லவிதமாக ட்விட்டரில் விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள். மேலும், சென்னையில் ஒரு படத்தைக் கொண்டாட பல திரையரங்கள் உள்ளது. அதில் ரோகிணி திரையரங்கம் ஒன்று. இன்று காலை முதல் ஷோவிற்கு வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், கார்த்திகேயா, ஹூமா குரேஷி ஆகியோர் வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளார்கள்.

-விளம்பரம்-

திரையரங்கை சேதம் ஆக்கிய அஜித் ரசிகர்கள்:

காலையில் இருந்தே வலிமை படத்திற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் ரோகினி சினிமாஸ் திரையரங்க உரிமையாளர் சில புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அது என்னவென்றால், திரையரங்கில் சில இடங்களில் சேதம் அடைந்து இருக்கிறது. மேலும், ரசிகர்கள் அஜித்தின் வலிமை படத்தின் உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் இருந்தால் அமரும் இருக்கைகளை உடைத்து உள்ளார்கள். அதற்கான புகைப்படத்தை தான் ரோகினி சினிமாஸ் திரையரங்கம் உரிமையாளர் பதிவிட்டு இருக்கிறார்.

திரையாங்கு முன் ரசிகர்கள் செய்த அலப்பறை:

இப்படி திரையரங்கை சேதம் ஏற்படுத்தியதால் திரையரங்க உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் திரையரங்கம் முன்பு ரசிகர்கள் பலர் அறையில் ஈடுபட்டுள்ளனர். அதில் சிலர் திரையரங்கம் முன்பு செல்லும் வாகனங்களில் இருந்து பால் பாக்கெட், தயிர், தண்ணீர் கேன் உள்ளிட்ட பொருள்களை பின்னால் இருந்து எடுத்து சென்று உள்ளனர். அதேபோல நாமக்கல்லில் உள்ள திரையரங்கில் வலிமை படம் திரையிட தாமதமானதால் அதற்கு நாட்டு வெடி வைத்து அராஜகம் செய்து இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

Advertisement