சீரியல் நடிகர் அவினாஷ் கூறியிருக்கும் குட் நியூஸ் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அவினாஷ். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், தன்னுடைய நான்கு வயதிலேயே இவர் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் ஸ்போர்ட்ஸ் பிளேயரும் ஆவார். நேஷனல் லெவலில் அத்தலடிக்சில் அவினாஷ் பல பதக்கங்களை பெற்றிருக்கிறார்.
View this post on Instagram
இருந்தாலும், இவருக்கு நடிப்பின் மீது தான் அதிக ஆர்வம். தன்னுடைய சிறு வயதில் இருந்து இவர் பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். நான்காம் வகுப்பு படிக்கும் போதே சன் டிவியில் ஒளிபரப்பான ‘தில்லானா தில்லானா’என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார். ஆனால், வீட்டில் படிப்பு தான் முக்கியம் என்று சொன்ன பிறகு இவர் 12 ஆம் வகுப்பு வரை படிப்பை முடித்துவிட்டு, தன்னுடைய டான்ஸ் கேரியரை மீண்டும் தொடங்கியிருந்தார்.
அவினாஷ் குறித்த தகவல்:
இவர் சன் டிவியில் ‘அழகு’ சீரியலில் திருநாவுக்கரசு என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி முடிவடைந்த 'அம்மன்' சீரியலிலும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலிலும், கயலின் தம்பியாக சில காலம் நடித்து இருந்தார். ஆனால் திடீரென அந்த சீரியலில் இருந்து இவர் விலகி விட்டார். இவர் தமிழ் சீரியல்கள் மட்டுமில்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் :
அது மட்டும் இல்லாமல் இவர், ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடனத்தால் கவர்ந்திருந்தார். இறுதிக்கட்டம் வரையில் இவரது டான்ஸ் தொடந்த நிலையில், ஒரு கட்டத்தில் பயிற்சியின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் நிகழ்ச்சியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நிலையிலும் தன்னால் முடியும் என்று மன தைரியத்துடன் போராடி அவினாஷ் நடனமாடி டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றிருந்தார்.
அவினாஷ் திருமணம் :
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வீட்டுக்கு வீடு வாசப்படி' என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் கண்ணன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் அவினாஷின் தங்கை அக்ஷிதாவும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது அக்ஷிதா 'பாக்கியலட்சுமி' சீரியலில் அமிர்தா நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகர் அவினாஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலி தெரசா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தங்களுடைய காதல் நட்பாக துவங்கி, காதலாக மாறி தற்போது கல்யாணத்தில் முடிந்துள்ளதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram
அப்பா ஆகப்போகும் அவினாஷ்:
மேலும், இவர்கள் திருமணம் காதல் திருமணம் ஆக இருந்தாலும் இரு வீட்டார் சம்மதத்துடனும் சிறப்பாக நடைபெற்றது. இவரின் திருமண புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. இந்நிலையில் தற்போது அவினாஷ் தான் தந்தையாக போகும் செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதோடு தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கிறார். இவரின் பதிவை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவினாஷ் ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.






