கார்த்திகை தீபம் 2 சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் யூசுப் ஃபெரோஸ்கன். இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என எல்லா சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் வில்லன் ரோலில் தான் மிரட்டி இருந்தார்.

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் 2 சீரியலில் முனியாண்டி என்ற ரோலில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த சீரியலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இதற்கிடையே இவர் ஏகவள்ளி என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.
ஏகவள்ளி- யூசப் பற்றிய தகவல்:
யூசுப் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானவர். அதேபோல் ஏகவள்ளி திருமணமாகி விதவையானவர். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அதுமட்டுமில்லை ஏகவள்ளி வேற யாரும் இல்லை யாரடி நீ மோகினி சீரியலில் பேயாக வந்த யமுனாவின் அக்கா தான். ஏகவள்ளியும் நிறைய சீரியலில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

ஏகவள்ளி வளைகாப்பு:
சமீபத்தில் தான் இவர்களுடைய வளைகாப்பு நடைபெற்று இருந்தது. சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தார்கள். இதை அடுத்து இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏகவள்ளி- யூசப் கூறியிருப்பது, எங்க ரெண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். எனக்கு விவாகரத்து ஆகி ரெண்டு குழந்தைகள். ஒரு பொண்ணு, ஒரு பையன். அவர்கள் விதவை. ஒரு பையன் இருக்கிறார். நாங்கள் இருவருமே நட்பு ரீதியாக பழக்கம் வந்தது. அதற்குப்பின் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எல்லோருமே ஒன்றாக தான் இருக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=538hEBfgE6k
ஏகவள்ளி- யூசப் பேட்டி:
நான் அவர்களிடம் எந்த கண்டிசனையும் போடவில்லை. அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே நான் ஏற்றுக் கொண்டேன். என்னையும் அவர் அப்படி ஏற்றுக் கொண்டார். எந்த ஒரு கண்டிஷனுமே போட்டு வாழவில்லை. எங்களுடைய நாளாவது குழந்தைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் இவர் பிஸியாக இருக்கும்போது கூட என்னுடைய குழந்தைகள்தான் என்னை கவனித்துக் கொள்கிறார்கள். எல்லோருமே பாப்பாவுக்காக காத்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறி இருந்தார்கள்.

ஏகவள்ளி- யூசப் குழந்தை:
இப்படி இருக்கும் நிலையில் சீரியல் நடிகர் பெரோஸிற்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏகவள்ளி- யூசப்புக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை பெரோஸ் கான் மனைவி ஏகவள்ளி சோசியல் மீடியாவில் பதிவிட்டு, அப்பா அம்மா ஆக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






