ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ஹிட் சீரியல்களில் “செம்பருத்தி” சீரியலும் ஒன்றும். இந்த சீரியலில் ஆதித்யா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ்.
இவர் விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள் ” மூலம் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். மேலும், அந்த சீரியலின் மூலம் பல பெண் ரசிகர்களையும் தனது ரசிகைகளையும் ஈர்த்தார்.
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஆபீஸ்” என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் “ஜோடி நம்பர் 1 ” என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
நடிகர் கார்த்திக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே யாஷினி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் 4 ஆண்டுகள் சீரியலில் கூட நடிக்காமல் இருந்தார் கார்த்திக். கார்த்திக்கின் இதுவரை யார் என்று தெரியாத நிலையில் தற்போது கார்த்திக் மனைவியின் வெளியாகியுள்ளது.