கை கலப்பு சண்டை கை குலுக்கலில் முடிந்தது – உதவி இயக்குனரை அடித்த விவகாரம் குறித்து நவீன் சொன்ன விளக்கம்.

0
407
navin
- Advertisement -

உதவி இயக்குனரை சீரியல் நடிகர் நவீன் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் இருவரும் சமாதானம் ஆகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நவீன். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலின் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான்.

-விளம்பரம்-

தற்போது நவீன் அவர்கள் கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அருண் ராஜனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு ஹீரோக்களில் ஒருவரான நவீன் சூட்டிங் வரவில்லை. இதனால் உதவி இயக்குனர் குலசேகரன், நவீன் அறைக்கு சென்று அழைத்திருக்கிறார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின் உதவி இயக்குனர் குலசேகரன் கண்ணத்தில் நவீன் அடித்து இருக்கிறார்.

- Advertisement -

உதவி இயக்குனரை அறைந்த விவகாரம்:

இதனால் ஷூட்டிங்கில் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது. இதனை அடுத்து சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தில் நவீன் மீது புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தற்போது இரு தரப்பில் இருந்தும் சமாதானமாகி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சமாதானத்துக்கு உதவி புரிந்த சின்னத்திரை இயக்குனர் சங்கத் தலைவர் இடம் கேட்ட போது அவர் கூறி இருந்தது, படபிடிப்பில் எங்களது உறுப்பினர் தாக்கப்பட்டது குறித்து எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்த எங்களது சக உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்புகளிடம் பேசப்பட்டது. ரெண்டு பேருமே நடந்ததை மறந்து கைகோர்க்க முடிவு செய்துவிட்டார்கள்.

சமாதானம் செய்த சின்னத்திரை இயக்குனர் சங்கத் தலைவர் :

நவீன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கிறார். குலசேகரனுக்கு ஏற்பட்ட மருத்துவ செலவு ஏற்றுக்கொண்டு அவர் காயத்தால் வேலைக்கு போக முடியாத நாளுக்கு ஊதியமாக ஒரு தொகையை தரவும் நவீன் சம்மதித்தார். பெரிய திரையோ, சின்ன திரையோ இயக்குனர்களை கேப்டன் என்று அழைப்பார்கள். உதவி இயக்குனர்களும் நாளை இயக்குனர்கள் தான் என்று கூறி இருக்கிறார். இதனை அடுத்து புகார் அளித்த குலசேகரன் கூறி இருப்பது, சம்பவம் நடந்தவுடன் இயக்குனர் சங்கத்தை அணுகி புகார் தந்தேன். அந்த நிமிடத்தில் இருந்து சங்கம் எனக்கு பல உதவிகளை செய்தது.

-விளம்பரம்-

உதவி இயக்குனர் குலசேகரன் அளித்த பேட்டி:

இப்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சுமூகமான ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இனி என் வேலைகளை தொடர போகிறேன் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து நடிகர் நவீன் கூறியது, குலசேகரன் என்னுடைய முந்தைய சீரியலில் இருந்து என்கூட வேலை செய்து கொண்டிருக்கிறார். டயலாக் சொல்லித் தருவார். அன்னைக்கு தப்பா ஒரு டயலாக் சொன்னார். அது தப்பு என்று நான் சொன்னேன். அவர் இல்லை என்று வாக்குவாதம் பண்ணினார். பதிலுக்கு நானும் பேசி அப்படியே நீண்டு கைகலப்பாகிவிட்டது. அவரும் என்னை தாக்க வந்தார்.

நவீன் அளித்த பேட்டி:

நானும் தடுத்தேன். அப்ப என் கை அவர் மேலப்பட்டதில் அவருக்கு காயம் உண்டாகிவிட்டது. இதுதான் நடந்தது. ஆனால், ஷூட்டிங் கூப்பிட்டு நான் வரலை என்கிற மாதிரி செய்தி பரவி விட்டது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு சீரியலில் இன்னைக்கு இந்த இடத்தில் இருக்கிறேன். நான் எப்படி ஒரு நல்ல பெயரை கெடுக்க விரும்புவேன். ஒருத்தரை ஒருத்தர் கை கொடுத்து நடந்ததை மறந்து விட்டோம். அவருக்கு குறிப்பிட்ட தொகையை நான் தந்தது உண்மைதான். அது அவருக்கு மருத்துவச் செலவுக்கு தந்தேன். இரண்டு நாள் இந்த காயத்தால் வேலைக்கு போக முடியாமல் இருந்ததற்கும் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement