நேத்ரனின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகள் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நேத்ரன். இவர் சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டான்ஸரும் ஆவார். இவர் பெரும்பாலும் வில்லன் ரோலில் தான் நடித்து இருந்தார். இவர் முதன் முதலாக ‘மருதாணி’ என்ற சீரியலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சேனல்களில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இருந்தார்.

மேலும், இவர் சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களிலும் நடித்து இருந்தார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது சீரியல்கள் தான். இவர் சீரியல் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இருந்தார். குறிப்பாக, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் நேத்ரன் மற்றும் அவருடைய மூத்த மகள் அபிநயா கலந்து இருந்தார்கள்.
நேத்ரன் குறித்த தகவல்:
இப்படி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் மீடியாவில் பயணித்துக் கொண்டிருந்தார்.
இதனிடையே இவர் தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். மேலும், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் அபிநயா ‘கனா காணும் காலங்கள்’ என்ற வெப் சீரிஸில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய இரண்டாவது மகள் படித்துக் கொண்டிருக்கிறார்.

நேத்ரன் உடல்நிலை:
அதேபோல் நேத்ரன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பொன்னி, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார். திடீரென்று சில மாதங்களாகவே இவர் எந்த தொடரிலுமே காணவில்லை. அதற்கு பின் விசாரித்த போது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் என்று தெரியவந்தது. இது தொடர்பாக நேத்ரன் மகள் பதிவு போட்டு இருந்தார். அதில், என்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. சில வாரமாகவே நாங்கள் ஹாஸ்பிடலில் தான் இருந்தோம்.
https://www.youtube.com/watch?v=9MZO4LZ4Vto
நேத்ரன் மறைவு:
சில டெஸ்டில் அவருக்கு கேன்சர் பாசிட்டிவ் என்று வந்தது. அதனால் சர்ஜரி பண்ணி விட்டார்கள். ஆனால், கல்லீரல் டேமேஜ் ஆகியிருக்கு என்று ஐசியூவில் அப்பா இருக்காங்க. நீங்களும் எல்லோருமே அப்பாவுக்காக ப்ரே பண்ணுங்கள். அந்த பாசிட்டிவ்வால் அவர் சீக்கிரம் சரியாகி வருவார் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நேத்ரன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவருடைய இறப்பு சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரபலங்கள் பலருமே இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள்.
View this post on Instagram
நேத்ரன் பதிவு:
இந்த நிலையில் நேத்ரனுடைய இறப்பிற்கு பிறகு அவருடைய மகள் அபிநயா எமோஷனலாக பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க இந்த உலகம் தவறிவிட்டது. ஆனால், நீங்கள் எப்போதும் எங்களுக்கு பிடித்த ஒரே ஹீரோ. உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்களுடைய தவறு கிடையாது. நாங்கள் அதை செய்வோம் என்று தன்னம்பிக்கையோடு கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.






