நம்ப 15 வருஷம் உழைக்கிறோம். நடிப்பு, திறமை இருந்தும் இப்படி இருக்கோம், ஆனா Gp முத்து மாதிரி ஆளுங்க – விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகர் புலம்பல்.

0
601
ragav
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எலாம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இளசுகளின் பேவரைட் சீரியல் என்றால் கனா காணும் காலங்கள். இந்த தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்க முடியாது. அதோடு டிஆர்பியில் டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
ragahav

அந்த வகையில் இந்த சீரியலில் புலி கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராகவேந்திரன். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் 15 வருடமாக மீடியா துறையில் இருக்கிறேன். நான் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்தேன். இப்போ வரைக்கும் அப்படித்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். யாரும் எனக்கு வாய்ப்பு கொடுக்க ரெடியாக இல்லை. அதற்காக என்னால் ஜால்ரா அடிக்க முடியாது.

- Advertisement -

ராகவேந்திரன் அளித்த பேட்டி:

அதுவும் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அதோட யூடுயுப் பிரபலம் ஜி.பி.முத்து பயங்கரமாக கெட்ட கெட்ட வார்த்தை பேசுபவர். அவர் பேசும்போது கேட்டு இவரை யாராவது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் யோசித்தேன். ஆனால், இப்ப அவரு கார் வாங்கி இருக்கிறார். உலகத்திலேயே கெட்டவார்த்தை பேசி கார் வாங்கின முதல் ஆளு இவர் தான். என்னால் நம்பவே முடியவில்லை. அசிங்கமாக பேசி ஒருத்தர் யூடியூப்ல பிரபலமாகி இருக்கிறார் என்று சொல்லும்போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நம்ப 15 வருஷம் உழைக்கிறோம். நடிப்பு, திறமை, கதையை வைத்து ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

என்ன சொல்ல போகிறாய் படம் பற்றி சொன்னது:

ஆனால், நம்ம நிலைமை இப்படி இருக்கு என்று தோனுது. அதுவும் இப்ப இருக்கும் தயாரிப்பாளர்களை சொல்லும்போது வேற லெவல். பென்டாஸ்டிக் என்று தான் சொல்லணும். படம் பேசுகிறதோ இல்லையோ அவர்கள் தான் அதிகம் பேசுகிறார்கள். அப்படியே காவியத்தை படைக்க மாதிரி எல்லாம் பேசுகிறார்கள். ஆனால், உள்ளே போய் பார்த்தால் ஒன்றுமே இல்லை. உதாரணத்திற்கு என்ன சொல்ல போகிறாய் படத்தை சொல்லலாம். சத்தியமாக சொல்கிறேன் என்னால் 10 நிமிடத்திற்கு மேல் அந்த படத்தை பார்க்க முடியவில்லை. அதுவும் நல்ல சொகுசான சோபாபில் உட்கார்ந்து கூட இந்த படத்தை பார்க்க முடியவில்லை.

-விளம்பரம்-

அஸ்வின் குறித்து ராகவேந்திரன் கூறியது:

அந்த அளவிற்கு படம் இருந்தது. மக்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களை கொண்டாடுகிறார்கள். அதை அவர்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போய் படம் கிடைப்பதெல்லாம் பெரிய அபூர்வம். அந்த வாய்ப்பை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள மாட்டுகிறார்கள். அஸ்வின் கதையை கேட்டு தூங்கி விடுவார் என்று சொல்லும்போது நானும் ட்ரோல் பண்ணி இருக்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு சரி வேணாம் என்று நினைத்தேன். அவரும் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டு இருந்தார். அதே போல் நானும் மீடியாவை விட்டு போகணும் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். என்னுடைய இந்த முடிவிற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் பார்த்த ஏற்றம் இறக்கம்.

ராகவேந்திரனின் குமுறல்:

இத்தனை வருஷம் எனக்காக என் அம்மா, அப்பா கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இன்னமும் நான் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. பிச்சைக்காரன் கூட என்னை விட அதிகமாக சம்பாதிப்பான். அந்த அளவிற்கு காலம் சென்று கொண்டிருக்கின்றது. என்னை பொறுத்த வரையும் சப்போர்ட்டிங் ரோலில் நடிப்பவர்கள் ரொம்பவே பாவம். சம்பளம் கிடையாது, நல்ல கதாபாத்திரமும் கிடையாது, நிம்மதியும் கிடையாது, துணை நடிகராக நடிக்கிற பலருடைய குமுறல்கள் தான் நான் சொல்கிறேன். நான் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகி விட்டேன். இனி மீடியாவே வேண்டாம் என நான் எடுத்த முடிவு எடுத்திருக்கிறேன் என்று மனவேதனையுடன் கூறி இருக்கிறார்.

Advertisement