சீரியல் நடிகர், ராகுல் ரவி சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. நடிகர்கள் வெள்ளித்திரையில் நடித்து எப்படி புகழ் பெறுகிறார்களோ அதே போல் தான் சின்னத்திரையில் நடித்தும் புகழ் அடைகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் கடந்த காலங்களில் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று சாதித்தவர்கள் தான் அதிகம். அந்த வகையில் ஒருவர் தான் ராகுல் ரவி. கேரள மாநிலம் திருச்சூர் பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் அந்த மாநிலத்தில் மாடலாக இருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கான சின்னத்திரை கதவு திறந்தது. அதன்படி மலையாளத்தில் வெளியான 'பொன்னம்பிலி' என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியல் பெரிதாக போகவில்லை. இருந்தாலும் ராகுல் ரவி இந்த ஃபீல்டில் எப்படியாவது வென்று விட வேண்டும் என வேட்கையோடு இருந்தார். பின் , கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒளிபரப்பான 'நந்தினி 'என்ற சீரியல் மூலம் ராகுல் ரவி தமிழில் என்ட்ரி ஆனார். அந்த சீரியலைத் தொடர்ந்து, நந்தினி 2, சாக்லேட், கண்ணான கண்ணே, கயல், அபியும் நானும் உட்பட பல சீரியல்களில் நடித்திருந்தார்.
மருமகள் சீரியல்:
தற்போது இவர் சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'மருமகள்' என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு லக்ஷ்மி நாயர் என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த இவரது திருமண வாழ்க்கையில் திடீரென ஒரு பூகம்பம் வெடித்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ராகுல் ரவி மீது அவரது மனைவி, ராகுல் ரவிக்கு இன்னொரு பொண்ணோடு தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைத்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். இந்தச் செய்தி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=WcVU_7iA7Kg
ராகுல் ரவி பேட்டி:
சமீபத்தில் நடிகர் ராகுல் ரவி இந்த சர்ச்சை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், தற்போது உள்ள சீரியல்கள் எல்லாம் ஹிந்தி சீரியல்களோடு ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால், 'மருமகள்' சீரியல் கொஞ்சம் வித்தியாசமான கான்செப்ட். அதில் கேபியுடன் நடிப்பதில் எனக்கு சந்தோஷம். நடிகர்கள் என்பது ஒரு பப்ளிக் பிராப்பர்ட்டி மாதிரி தான். மக்கள் அவங்களைப் பற்றி எதுவேண்டுமானாலும் பேசுவார்கள். அதனால் நான் அதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. மேலும், சில மதங்களுக்கு முன்பு என்னை குறித்து கூட நிறைய வதந்திகள் வந்தது.
நான் இன்டர்நேஷனல் கிரிமினலா:
ஆனால், என்னுடைய நடிப்புத் தொழிலை அது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. என்னுடைய ஆக்டிங்கில் இருந்தே அதை நீங்கள் பார்க்கலாம். என்னை பற்றி நிறைய பொய்யான தகவல்கள் எல்லாம் வெளியே வந்தன. ஒரு சாதாரண பையனை திடீரென்று ஒரு இன்டர்நேஷனல் கிரிமினல் மாதிரி எல்லாரும் ட்ரீட் பண்ணாங்க. என் கூட இருப்பவர்களுக்கு என்னை பற்றி தெரியும். ஆனால், வெளியே இருக்கிறவங்க இந்த விஷயத்தை கொஞ்சம் எமோஷனலாக பார்த்ததால், சோசியல் மீடியாக்களில் எல்லாம் எனக்கு நிறைய திட்டி மெசேஜ்கள் வரும்.

கமிட் ஆக விரும்பவில்லை:
இந்த விஷயத்தில் என்னுடைய அம்மா தான் நிறைய பாதிக்கப்பட்டார். மத்தபடி இப்போ எல்லா பிரச்சனையும் சரி ஆகிவிட்டது. அந்தப் பிரச்சனைக்கு பிறகு இப்போ சீரியல் நடிக்கிறேன். அந்தப் பிரச்சனை என்னை எதுவும் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நானே கேபி கிட்ட கூட 'என் கூட ஜாக்கிரதையா இருந்துக்கோ' என்று கலாய்ப்பேன். எனக்கு என்ன என்றால் எதுக்கு நம்ம மேல இப்படி தேவை இல்லாமல் பழி போட்டாங்க என்று நினைத்தேன். மத்தபடி என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. எல்லாருக்கும் தெரியும் எனக்கு இப்போ விவாகரத்து ஆகிவிட்டது. மேலும், எந்த ஒரு கமிட்மெண்டுக்கும் போக நான் விரும்பவில்லை என்று பேசியுள்ளார்.






