6 மணி நேரம் துடி துடித்து இருந்தான். சாய்பிரசாந்தின் மரணம் குறித்து பேசிய பிரபல நடிகர்.

0
80682
saiprasadh
- Advertisement -

சின்னத்திரை சீரியல் நடிகர் சாய் பிரசாந்த் அவர்கள் கொடூரமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற திடுக்கிடும் தகவலை நடிகர் ஒருத்தர் வெளியிட்டு உள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரை நடிகர் சாய் பிரசாத் தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலே இந்த தற்கொலை முடிவுக்கு காரணம் என அவர் கடிதமும் எழுதி வைத்து உள்ளார். இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Image result for nadigar sai prasath

- Advertisement -

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் நடிகர் சாய் பிரசாத். பின்னர் இளவரசி, அண்ணாமலை, அண்ணாமலை உட்பட ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலம் ஆனவர். இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ளனர். ஆனால், சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். நடிகர் சாய் பிரசாத் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் முன்தினம் பார்த்தேனே, நேரம், தெகிடி, வடகறி, மேகா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இருந்தாலும் இவர் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்து கொண்டே தான் இருந்தார்.

திடீரென்று நடிகர் சாய் பிரசாத் அவர்கள் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் அறிந்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் நண்பர்கள் மற்றும் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சாய் பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சாய் பிரசாத் கடிதம் ஒன்று எழுதி வைத்து உள்ளார். அந்த கடிதத்தில் தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து மன உளைச்சல்கள் ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொண்டேன் என்று எழுதி வைத்து உள்ளார். அந்த சமயத்தில் சாய் பிரசாத் ஆயா வட சுட்ட கதை என்ற படத்திலும் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Related image

அதுமட்டுமில்லாமல் சாய் பிரசாத் அவர்கள் நிரஞ்சனா என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார். பிறகு இவர்களுக்கு விவாகாரத்தும் ஏற்பட்டது என்றும், மூன்று மாதங்களுக்கு முன்பு தான் சாய் பிரசாத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சாய் பிரசாத் தற்கொலை குறித்து நடிகர் பப்லு திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவர் கூறியது, பிரசாந்த் மிகவும் மன அழுத்தம் கொண்டவர். ஒரு பெண்ணை காதலித்து விட்டு பயங்கரமாக சந்தேகப்பட்டு மட்டுமின்றி அதிகமாக சண்டையும் போட்டு உள்ளார்.

அதோடு அடிக்கடி செத்துவிடுவேன் செத்துவிடுவேன் என்று பலரையும் மிரட்டிக் கொண்டிருந்த சாய் கடைசியில் அவர் சொன்ன மாறியே தற்கொலை செய்து கொண்டார். சாவு எல்லோருடைய வாழ்விலும் வரும். ஆனால், சாய் பிரசாத் பாட்டிலை அரைத்து அதை சாப்பிட்டு பலவிதமாக செயல்பட்டு 6 மணி நேரம் ஒரு அறையில் துடிதுடித்து மிகக் கொடூரமாக தற்கொலை செய்து கொண்டார் நடிகர் பப்லு தெரிவித்து உள்ளார்.

Advertisement