பிக் பாஸ்ல அவ்ளோ சண்ட போட்டாலும் சினேகன் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய பிரபலம். வீடியோ இதோ

0
3364
snehan
- Advertisement -

பிரபல பாடல் ஆசிரியரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சினேகனுக்கு நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்னவோ முதல் சீசன் தான். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

சினேகனுக்கு நேற்று கன்னிகா என்ற நடிகையுடன் திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தான். இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்துவந்துள்ளனர்.

இதையும் பாருங்க : ஸ்ருதி ஹாசன் தொப்புளில் ஓவியம் பழகிய அவரின் புதிய Boy Friend – வைரலாகும் வீடீயோ.

- Advertisement -

இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர்.சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை நடத்தி வைக்க தனது கட்சி தலைவரின் தலைமையில் தனது காதலிக்கு தாலி கட்டினார் சினேகன்.

நேற்று திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து மாலை Reception நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கணேஷ், சக்தி, ஆரவ் என்று பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகனுடன் அடிக்கடி சண்டை போட்ட சுஜா வருணி தனது குடும்பத்துடன் சென்று சினேகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement