சித்து – ஸ்ரேயா வழியில், காதல் திருமணம் முடித்த ஜீ தமிழ் சீரியல் பிரபலம். திருமண புகைப்படம் இதோ.

0
1044
abinavya
- Advertisement -

பொதுவாகவே ரசிகர்கள் சினிமா முதல் சின்னத்திரை பிரபலங்களை குறித்து ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் போதும் அதை சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருவார்கள். அதிலும் பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் கொண்டாட்டம் என எந்த விசேஷம் நடந்தாலும் ரசிகர்களும், நெட்டிசன்களும் அதை சோசியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரல் ஆக்கி விடுகிறார்கள். அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே சின்னத்திரை, வெள்ளித்திரையில் உள்ள பிரபலங்கள் பலருக்கு திருமணம் நடந்து வருகிறது. மேலும், சமீப காலமாகவே பிரபலங்களின் திருமணங்கள் விமர்சையாக இல்லாமல் நடந்து வருகிறது.

-விளம்பரம்-

கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்தே திரைப்பிரபலங்கள் பலர் யாருக்கும் தெரியாமல் தங்கள் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணங்களை செய்து வருகிறார்கள். பின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் பல சின்னத்திரை ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறி உள்ளனர்.

- Advertisement -

சின்னத்திரையில் ரீல் ஜோடிகள்- ரியல் ஆனது:

கடந்த ஆண்டு சின்னத்திரையில் காதல் ஜோடிகளாக வலம் வந்த சபானா- ஆர்யன் திருமணம் எளிமையாக நடந்தது. அவர்களைத் தொடர்ந்து மதன் – ரேஷ்மா கோலாகலமாக திருமணம் செய்து இருந்தார்கள். இவர்களுடைய திருமணம் முடிந்து இரண்டு நாட்களிலேயே திருமண சீரியல் சித்து – ஸ்ரேயாவின் திருமணம் விமர்சனமாக நடந்தது. இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த வரிசையில் புது ஜோடி இணைந்து இருக்கிறார்கள்.

This image has an empty alt attribute; its file name is 1-235-682x1024.jpg

தீபக் – அபிநவ்யா ஜோடி:

அவர் வேற யாரும் இல்லைங்க நடிகர் தீபக் – அபிநவ்யா. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் என்றென்றும் புன்னகை என்ற சீரியலின் மூலம் மக்கள் மனதில் பிரபலமானவர் தீபக். அதேபோல் அபிநவ்யா, சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். பின் இவர்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார்கள். பின் இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.

-விளம்பரம்-

தீபக் – அபிநவ்யா நிச்சயதார்த்தம் :

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அபி நவ்யா மற்றும் தீபக் நிச்சயதார்த்தம் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களின் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இதை பார்த்த சீரியல் ரசிகர்களும், பிரபலங்களும் அபிநவ்யா மற்றும் தீபக் இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். பின் திருமணம் எப்போது? என்று ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.

தீபக் – அபிநவ்யா திருமணம்:

இப்படி ஒரு நிலையில் இவர்களது திருமணம் இன்று (ஜனவரி 27) சென்னை மாங்காடு பகுதியில் உள்ள கார்த்திக் பேலஸில் படு கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது. அதற்கான புகைப்படங்கள் எல்லாம் அபி நவ்யா மற்றும் தீபக் தங்களுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்து பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement