என் புத்திய செருப்பால அடிக்கணும்னு பல பேர் முன்னாடி அசிங்கப்படுத்திட்டார் – சேது பட அனுபவம் குறித்து அபிதா.

0
13920
sethu
- Advertisement -

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படம் விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. விக்ரமிற்கு சசீயான் என்ற பட்டப்பெயரை கொடுத்ததும் இந்த படம் தான். இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிதா.அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்த்த இவருக்கு பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை.

-விளம்பரம்-

சேது படத்திற்கு பின்னர் தமிழில் சீறி வரும் காலை, பூவே பெண் பூவே போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பினார். சன் தொலைக்காட்சியில் இவர் நடித்த ‘திருமதி செல்வம்’ தொடர் மெகா ஹிட் அடைந்தது. அதன் பின்னர் ஒரு சில சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : பொறுக்கி நாய்ங்களா, உன்ன எல்லாம் மிதிக்கனும் – சிக்காவை திட்டி தீர்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

- Advertisement -

தருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார் இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தாரம் என்கிற டிவி தொடர்களில் நடித்து வந்தார் ஆனால் அதற்குப் பின்னர் இவருக்கு எந்த சீரியல் வாய்ப்பும் பட வாய்ப்பும் கிடைக்க வில்லை.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிதா, சேது படத்தின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அதில், அந்த படத்தில் பரத நாட்டியம் ஆடுவது போல காட்சி எடுக்கப்பட்ட போது இவருக்கு நடனம் வரவில்லையாம். இதனால் கடுப்பான பாலா, உன்னை எல்லாம் ஹீரோயினா போட்டேன் பாரு என்ன செருப்பால அடிக்கணும் என்று அனைவர் முன்பும் கூறியதால் இவர் பாலாவுடன் பேசவே இல்லையாம். அதன் பின்னர் இவர் அம்மாவிடம் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று புலம்பியுள்ளார். பின்னர் சினிமா என்றால் அப்படி தான் இருக்கும் என்று அவர் அம்மா சொன்னதால், அடுத்த நாள் பாலாவிடம் மன்னிப்பு கேட்டு அழுதுள்ளார். பாலாவும் ‘உங்க நல்லதுக்கு தான் கோவப்பட்டேன்’ என்று கூறி சமாதானம் செய்து வைத்தாராம்.

-விளம்பரம்-
Advertisement