விஜய்யின் அரசியல் பயணம் குறித்து சீரியல் நடிகை ஆல்யா மானசா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். அதோடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிடுவதாக விஜய் அறிவித்திருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் தன் கட்சி கொடியை ஏற்றி உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி இருந்தார். அந்த கட்சி கொடியில் வாகை மலரும் இரு பக்கமும் யானை உருவம் இருந்தது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலையில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தனது முதல் அரசியல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார் தலைவர் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு:
மேலும், மாநாட்டில் முழு அரசியல் தலைவனாக விஜய் பேசியிருந்தது பலரையுமே மெய்மறக்க வைத்தது. அதேபோல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விஜய்னுடைய பேச்சும் அனல் பறக்க இருந்தது. பின் மாநாட்டில் விஜய், தன் கட்சி கொள்கைளை குறித்து பேசி இருந்தார். விஜயின் மாநாட்டிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தாலும் வழக்கம்போல சில அரசியல் கட்சிகள் அவரை விமர்சித்தும் அவர் கருத்துக்களுக்கு கன்னடம் தெரிவித்தும் இருந்தார்கள்.
விஜய் அரசியல்:
இதை அடுத்து தன் கட்சிக்காக ஒரு புதிய டிவி சேனல் திறக்கப்பட இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த சேனலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செய்திகள், விஜயினுடைய சுற்றுப்பயணம் உட்பட எல்லா விவரத்தையும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. அதோடு கடந்த சில வாரங்களாகவே விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்மையில் நடந்த செய்தியாளர்கள் பேட்டியில் சீரியல் நடிகை ஆல்யாவிடம், விஜயின் கட்சிக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆல்யா பேட்டி:
அதற்கு ஆல்யா, கண்டிப்பாக என்னுடைய ஓட்டு விஜய்க்கு தான். அவருடைய கட்சியில் உறுப்பினராக சேருவனா என்று தெரியவில்லை. ஆனால், அவருடைய கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடியாது. காரணம், நேரமில்லை. குழந்தை, குடும்பம், சூட்டிங் என்று இருக்கிறது. ஆனால், என்னுடைய ஓட்டு விஜய்க்கு தான் என்று கூறுகிறார். சின்னத்திரையில் மிகப்பிரபலமான நடிகையாக ஆல்யா மானசா திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
ஆல்யா குறித்த தகவல்:
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தன்னுடன் சேர்ந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். தற்போது சஞ்சீவ் சன் டிவி கயல் சீரியலில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். ஆல்யா நடித்த இனியா சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது.