சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த தமிழ் சீரியல் நடிகை – வெளியான புகைப்படங்கள் இதோ.

0
740
archana
- Advertisement -

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்களின் திருமண புகைப்படங்களும், நிச்சயதார்த்த புகைப்படங்களும் அதிகமாக வைரலாகி வருகிறது. நேற்று கூட பிரபல நடிகர் ஹரீஷ் உத்தமன், நடிகர் வெற்றி அவர்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையின் திருமண புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, மலையாள நடிகை அர்ச்சனா சுசீலன். நடிகை ஆக வேண்டும் என்ற பல கனவுடன் மீடியாவுக்குள் நுழைந்தவர் அர்ச்சனா சுசீலன்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் தொகுப்பாளினியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் மலையாளத்தில் பிரபலமான கலக்கி வந்தார் அர்ச்சனா சுசீலன். மேலும், இவருக்கு நடனத்தில் அதிக ஆர்வம் இருந்தால் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தி இருக்கிறார். அதன் மூலம் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதன்முதலில் அர்ச்சனா சுசீலன் மலையாள சீரியலில் தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.

- Advertisement -

அர்ச்சனா சுசீலன் திரை பயணம்:

பின் மலையாளத்தில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென இடத்தை பிடித்தார். அதன் பின் இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக அர்ச்சனா சுசீலன் பங்கு பெற்று இருந்தார்.

அர்ச்சனா சுசீலன் நடித்த தமிழ் சீரியல்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்தது. இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகளும் வந்தது. பின் அர்ச்சனா சுசீலன் மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தார். அப்புறம் மலையாளத்திலிருந்து தமிழ் சின்னத்திரையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாராணி என்ற தொடரில் அர்ச்சனா சுசீலன்.நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகையாக மாறினார்.

-விளம்பரம்-

அர்ச்சனா சுசீலன் திருமண புகைப்படம்:

அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இளவரசி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ச்சனா சுசீலன் நடித்து இருந்தார். அதற்குப் பிறகு இவர் சில காலம் தமிழ் சீரியலில் காணவில்லை. இந்நிலையில் தற்போது இவருக்கு திருமணமாகி உள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அர்ச்சனா சுசீலன்- பிரவீன் நாயர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதை அர்ச்சனாவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

அர்ச்சனா சுசீலன் பதிவிட்ட இன்ஸ்டா:

அதில் அவர் கூறியது, நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எனக்கு எல்லாமே என்னுடைய வாழ்க்கையில் கிடைத்துவிட்டது. எல்லோருக்கும் நன்றி. அதேபோல் என்னுடைய திருமண உடையை தயார் செய்த aanu nobby ரொம்ப நன்றி என்று பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் அர்ச்சனா சுசீலன் தன்னுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று பகிர்ந்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement