தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் தான் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்டது. இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை தழுவி வந்தது ஆகும். இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், நடித்து இருந்தார்கள்.

இவர்கள் இருவருக்கும் நிகராக செம்பருத்தி சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் மித்ரா. மித்ராவின் உண்மையான பெயர் பரதா நாயுடு. இவர் 2011 ஆம் ஆண்டு பாஸ்கர் இயக்கத்தில் வெளியான ‘தேன் மிட்டாய்’ என்ற மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில்அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படத்திலும் பரதா நடித்து இருந்தார்.
பரதா நாயுடு குறித்த தகவல்:
மேலும், 2017-ம் ஆண்டு வெளியான ‘நிரஞ்சனா’ என்ற படத்திலும் பரதா கதாநாயகியாகவும் நடித்து இருந்தார்.
ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை. இப்படி இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது செம்பருத்தி சீரியல் தான். இதனை அடுத்து இவர் பரத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று இருந்தது. திருவண்ணாமலையில் இவர்களின் திருமணம் எளிமையாக நடைப்பெற்றது.

பரதா திரைப்பயணம்:
அதன் பின் 2023 ஆம் ஆண்டில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியலில் தான் இவர் நடித்து வந்தார். பின் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் மீண்டும் இரண்டாவது முறை கர்ப்பமானார். கர்ப்பமான பிறகும் இவர் சில மாதங்கள் சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.
https://www.youtube.com/watch?v=vJWsXQSdkTo
பரதா குழந்தை:
அதற்கு பிறகு தான் இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். பின் இவருடைய வளைகாப்பு புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. தற்போது இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷமான செய்தியை சீரியல் நடிகை பரதா சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் இதற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.






