சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கரோலின். இவர் விஜேவாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு இவர் சீரியலில் நடித்திருக்கிறார். இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜமீலா என்ற தொடரின் போது இவர் கர்ப்பமாக இருந்தார். இருந்துமே இவர் நடித்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் இவர் சீரியலில் இருந்து ஓய்வு பெற்றார். குழந்தை பிறந்த பிறகும் இவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் நடிக்க வரவில்லை. பின் நடிகை கரோலின் திடீரென்று வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை எடுத்திருந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கரோலின், இப்போது நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். குழந்தை வயிற்றில் இருக்கும் போதே நடித்திருந்தேன். பாப்பா நார்மல் டெலிவிரியில் தான் பிறந்தார். நாங்கள் எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். இப்ப வரைக்குமே ரொம்ப நார்மலாக தான் இருக்கிறது. எல்லா டெஸ்ட்டும் எடுத்து விட்டோம். எந்த டெஸ்ட் ரிப்போர்ட்டிலும் எந்த குறையும் இல்லை. அப்படியே ஏன் எனக்கு திடீரென்று வலிப்பு வந்தது என்றே தெரியவில்லை. டாக்டர் உட்பட யாருக்குமே புரியவில்லை. நான் ஹாஸ்பிடல் போனதிலிருந்து எனக்கு என்ன நடந்தது? என்று தெரியவில்லை என்று சொன்னார்.
கரோலின் குறித்த தகவல்:
அதற்கு பின் கரோலின் கணவர், நானும் சினிமா துறையை சேர்ந்தவன் தான். மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறேன். ஒரு ஷூட்டிங்க்காக பாண்டிச்சேரி போயிட்டு வரும்போது தான் கரோலினுக்கு வலிப்பு வந்த விஷயத்தை சொன்னார்கள். அவசர அவசரமாக கரோலினை ஹாஸ்பிடலுக்கு அழைத்து போனோம். நாலு மணி நேரம் கிரிட்டிக்கல் என்று சொல்லிவிட்டார்கள். அவங்க முகத்தை எல்லாம் மூடி குப்புற படுக்க வைத்து விட்டார்கள். அவங்க இதயம் 25% தான் வேலை செய்கிறது. 60% மேல் வந்தால் தான் ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பிறகு தான் நார்மலானது.

கரோலின் பேட்டி:
அடுத்த மூன்று நாள் அவங்க கோமாவுக்கு போய்விட்டதாக சொன்னார்கள். எனக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. எங்களுக்கு எல்லாமே கரோலின் தான். ஐந்து மாத குழந்தையை என் மாமியார் இடம் பார்த்துக்க சொல்லிவிட்டு நான் மட்டும்தான் ஐசியூ வாசலில் இருந்தேன். ஐசியு வாசலில் நிற்கிறது பெரிய கொடுமை. எதிரிக்கு கூட அந்த நிலைமையே வரக்கூடாது. 16 நாள் கழித்துதான் கரோலினுக்கு சுயநினைவுக்கே வந்தார்கள். எல்லாம் சரியாகிவிட்டது என்று போய் பார்த்தால் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்டார். எங்க எல்லாருக்குமே ஒரே ஷாக். அதற்குப் பிறகுதான் டாக்டர் செக் பண்ணி பாத்துட்டு, இவங்க கடந்த ஆறு வருடத்தையும் மறந்து விட்டார்கள் என்று சொன்னார்கள்.
https://www.youtube.com/watch?v=R3ciJXMX1gw
கரோலின் கணவர் பேட்டி:
எங்களுக்கு கல்யாணம் ஆனது, குழந்தை பிறந்தது எல்லாமே மறந்து விட்டார்கள். போட்டோ, வீடியோ எல்லாம் காட்டித்தான் அவர்களுக்கு எடுத்து சொன்னோம். இன்சூரன்ஸ் எவ்வளவோ முக்கியம் என்பதை அந்த மருத்துவமனை நாட்கள் தான் எனக்கு கத்துக் கொடுத்தது. அவர்களுக்கு வென்டிலேட்டர் வைத்திருந்ததால் அதற்கும் சேர்த்து மருத்துவ செலவு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 80,000 வரைக்கும் ஆனது. எங்களுக்கு நடிகர் ஜீவா ரவி சாரை தெரியும். அவர் சொல்லி இணையத்தில் உதவி கேட்டுட்டும். நான் வேலை பார்த்த பெரிய பெரிய நடிகர்களிடம் எல்லாம் சொன்னார். சிலர் உதவி செய்தார்கள், சிலர் உதவுவதாக சொல்லி கடைசி நேரத்தில் கைவிட்டார்கள். யாரும் யாருக்கும் உதவனும் என்று கட்டாயம் இல்லை.

கரோலின் தாய் பேட்டி:
திருமகள் சீரியல் ஹீரோ சுரேந்தர் எங்களுக்கு ஃபேமிலி நண்பர். கிட்டத்தட்ட 32 லட்சம் செலவானது என்று சொன்னார். அதற்குப் பிறகு கரோலின் தாய், கரோலின் தான் அவளுடைய தம்பி, தங்கையை பார்த்துக்கொண்டார். அன்னைக்கு இரவு திடீர் என்று அவளுக்கு வலிப்பு வந்தது. கிட்டத்தட்ட 12 வருடத்திற்கு முன்னாடியும் இவளுக்கு இந்த மாதிரி வந்தது. அப்ப பிரைன் ஃபீவர்னு கண்டுபிடித்தார்கள். அப்பாவும் கோவமாவுக்கு போனாள். ஆனா ரெண்டே நாளில் குணமாகிவிட்டார். அது மாதிரி தான் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்டர் சொன்னார்கள். அவள் தான் குழந்தையை வைத்திருப்பாள். அப்படி இருந்த குழந்தையை கிட்டவே சேர்க்கவில்லை என்பதுதான் வேதனையாக இருந்தது. இப்ப அவர் குழந்தையோடு விளையாடுவதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு. மறுபடியும் வேலைக்கு போகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எனக்கும் இப்படி இருக்கிற கரோலினை பார்க்க முடியவில்லை என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.






