சினிமா,சீரியல் தாண்டி பிசினஸில் கால் தடம் பதிக்கும் கயல் சீரியல் நடிகை- என்ன பிசினஸ் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

0
350
- Advertisement -

சீரியலை தாண்டி பிசினஸிலும் கயல் சீரியல் நடிகை கால் தடம் பதிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று சின்னத்திரை சீரியல்கள். சமீப காலமாகவே ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைகளுடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த தொடர்கள் மட்டும் இல்லாமல் தொடர்களில் இருக்கும் பிரபலங்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பிற தொழில்களிலும் கவனம் செலுத்தி தொழிலதிபர்களாக திகழ்கிறார்கள். ரெஸ்டாரன்ட், பியூட்டி பார்லர், பொட்டிக், உணவகம், பேன்சி ஜுவல்லரி ஷாப், காஸ்மெடிக்ஸ் பிராண்ட் என பல தொழில்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், வனிதா, மகேஸ்வரி, ஸ்ரீதேவி அசோக், ஸ்ருதிகா என பல சீரியல் நடிகைகள் நடித்துக் கொண்டும் தனியாக பிசினஸ் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

சைத்ரா புது தொழில்:

அந்த வரிசையில் நடிகை சைத்ரா ரெட்டி இணைந்து இருக்கிறார். இவர் துணிக்கடை ஒன்றை துவங்க இருக்கிறார். பெங்களூரிலேயே இவர் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து பிரத்தியோகமாக நெய்த சேலைகளை தான் விற்பனை செய்கிறார். இவர் துணி கடைக்கு `Nilavarasi’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த கடையின் உடைய திறப்பு விழா ஆகஸ்ட் 9-ஆம் தேதி துவங்க இருக்கிறது.

பிசினஸ் குறித்த தகவல்:

தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து நண்பர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே சைத்ரா ரெட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே இவர் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது சென்னையில் இவருடைய பியூட்டி பார்லரின் கிளைகள் பல இருக்கிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் இளசுகளின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சைத்ரா ரெட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மக்கள் காதல் பிரபலமானவர்

-விளம்பரம்-

சைத்ரா ரெட்டி குறித்த தகவல்:

அதன் பின் இவர் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து எல்லோருக்கும் பிடித்தமான வில்லியாக திகழ்ந்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் ஹீரோயினியாக நடித்து வருகிறார். தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ்வும் நடிக்கிறார்கள்.

சைத்ரா ரெட்டி சீரியல்:

இந்த கயல் சீரியலின் ஹிட்டிற்கு முக்கிய காரணமாக சைத்ரா திகழ்கிறார். மேலும், சன் டிவி சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முன்னிலையில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் இவர் கட்டும் சேலைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இது தவிர இவர் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த வலிமை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சைத்ரா நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement