ஒரு எபிசோடுக்கு 1 லட்சம் சம்பளமா..? சீரியல் நடிகைகளின் சம்பளம் எவ்ளோ தெரியுமா..? லிஸ்ட் இதோ

0
1233
serial-actress

சினிமாவில் உள்ள நடிகைகளின் சம்பளங்கலங்கள் கோடிகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. அதில் ஒரு சில நடிகைகள் ஒரு விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம், மற்ற நடிகைகள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்திற்கு ஈடாக இருக்கிறது.

Ramya-Krishnan

ஆனால், சின்னத்திரை நடிகைகளின் கதையே வேறு, சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளுக்கே இல்லத்தரசிகளின் ரசிகர்கள் அதிகம். இதில் ஒரு சில சின்னத்திரை நடிகைகள் லட்ச கணக்கில் சம்பளம் பெற்றாலும், ஒரு சில நடிகைகளின் சம்பளம் ஐயோ பாவம் என்ற நிலையில் தான் உள்ளது.

சின்னத்திரையில் உள்ள சில துணை நடிகைகள் லட்சத்தில் அல்ல, ஆயிரத்தில் அல்ல, நூறு கணக்கில் தான் சம்பளம் பெருகிறாரகள் என்றால் கொஞ்சம் நம்பும்படி இல்லை தானே. ஆனால் அது தான் கொஞ்சம் கசப்பான உண்மை.

vani-bhojan

சினிமாவில் நடிகைகளாக இருந்து தற்போது சின்னத்திரைக்கு வந்த ராதிகா, தேவையாணி போன்ற நடிகைகள் ஒரு எபிசோடிற்கு 1 லட்ச ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர். ஆனால் சின்னத்திரையில் உள்ள நடிகைகள் சிலர் சித்தி, தோழி அல்லது வேறு ஏதாவது துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளுக்கு 300 முதல் 500 ருபாய் வரை தான் சம்பளமாக பெறுகின்றனர்.

சரி, தற்போது தற்போது சிரியலில் நடிக்கும் முன்னணி ஹீரோயின்கள் தொடங்கி சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் வரை , ஒரு எபிசோடிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறாரகள் என்பதை பார்க்கலாம்.

Sonia-Agarwal

1 லட்சம் சம்பளம்

*ராதிகா

*தேவையணி

40 முதல் 50 ஆயிரம்

* ரம்யாகிருஷ்ணன்,சோனியா அகர்வால், மதுமிதா சங்கவி –

25000 ருபாய்

* சன் மியூசிக் மஹேஸ்வரி பாரதி

*தென்றல் சுருதி

*மௌன ராகம் ஷமிதா

*வாணி போஜன்

*ரக்ஷிதா

15000 ரூபாய்

*நளினி

*சுத்த சந்திரன்

*அபிதா (திருமதி செல்வம்) –

10000 ரூபாய்

*வடிவுக்கரசி

*ஷாந்தி வில்லியம்ஸ்

*மோனிகா மேக்னா

*நிஷா ரேகா(அண்ணியார்)