அம்மாவுக்கு கொரோனா. பாட்டி கவலைக்கிடம். ஆபத்தில் 45 பேர். முதலைச்சரிடம் உதவி கேட்ட சீரியல் நடிகை. உருக்கமான வீடியோ.

0
5474
deepika

ஒட்டுமொத்த உலகையும் இந்த கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து கொண்டு இருக்கின்றது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் தாக்கிக் கொண்டு வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவில் தான் கொரானாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது டெல்லியிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பாலிவுட் சீரியலில் மிக பிரபலமான நடிகையின் தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சீரியலில் மிகப் பிரபலமான நடிகை தீபிகா சிங். இவருடைய தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனை தரப்பில் இருந்து அதற்கான பரிசோதனை முடிவுகள் கொடுக்கவில்லை. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீடியோ ஒன்றை பதிவு செய்து கோரியுள்ளார். அதில், நடிகை தீபிகா சிங் அவர்கள் தன்னுடைய கணவர், மகன் உள்ளிட்ட 45 பேர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் தான் தீபிகாவின் தாயாருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தெரிய வந்தது. அவரை லேடி ஹார்திங்கோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. பிறகு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி ஆனது. இந்த பரிசோதனைக்கான முடிவை கேட்டால் மருத்துவர்கள் கொடுக்க மறுப்பதாகவும், மருத்துவர்கள் அதைக் கொடுத்தால் மட்டும் தான் தன்னுடைய அம்மாவை மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்க முடியும் என தெரிவித்துள்ளார் தீபிகா.

மேலும், தன்னுடைய பாட்டியின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவரை டில்லியில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய குடும்பத்தில் 45 பேர் இருக்கும் பட்சத்தில் தன்னுடைய அம்மாவை வீட்டில் தனிமை படுத்த முடியாத காரியம். இந்த கொரோனா பலருக்கும் பரவ வாய்ப்புள்ளது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் விரைந்து நடவடிக்கை வேண்டும் என ஒரு வீடியோ பதிவில் நடிகை தீபிகா தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement