வீட்டை விட்டு துரத்தியதால் தர்கா வாசலில் படுத்துறங்கும் சீரியல் நடிகை தேவி கிருபாவின் அம்மா.!

0
573

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான `ஆனந்தம்’, `தென்றல்’ போன்ற சீரியல்கள் நடித்து  பிரபலமானவர் தேவி கிருபா. தற்போது வசந்த் தொலைக்காட்சியில் ஒரு கிச்சன் ஷோவுக்கு தொகுப்பாளினியாக இருக்கிறார். இவரது தாயார் ஸ்வாதி கிரிஜா மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Image result for devi krupa

அந்த புகாரில், 2003-ல இருந்து என் பொண்னு முன்னேற்றத்துக்காகவே பாடுபட்டிருக்கிறேன். இரவு, பகல்னு பார்க்காம அவளுக்காக வேலை பார்த்திருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எப்போவும் அவகூட இருப்பேன். என் மகன் கோகுல் அவளுக்காக கிட்டத்தட்ட 14 வருடம் டிரைவர் மாதிரி அவளுக்காக கார் ஓட்டியிருக்கான்.

- Advertisement -

எனக்கு 65 வயசுக்குமேல ஆகுது. இந்த வயசுல என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டாங்க. இப்போ நான் ஐயப்பன்தாங்கலில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கேன். என் மகன்தான் எனக்கான செலவைப் பார்த்துக்கிறான். `இனிமே என் கையிலிருந்து ஒரு பைசா தரமாட்டேன். இனி என் வாழ்க்கையை நான் பார்க்கப்போறேன். உங்க மகன்தான் உங்களைப் பார்க்கணும்; அவரே பார்த்துப்பார்’னு சொல்லி அனுப்பிட்டாங்க.

ஸ்வாதி கிரிஜா

இதோ… எட்டு மாசம் ஆகுது!. வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு எதிரில் இருக்கும் கோயில், தர்கா வாசல்லதான் படுத்துத் தூங்குறேன். எனக்குத் தெரிஞ்ச யோகா, டான்ஸ் இப்போ கைக்கொடுக்குது. தெரிஞ்சவங்களுக்கு கிளாஸ் எடுக்கிறேன். பல நாள்கள் பட்டினி கெடந்தாச்சு.” என்றவர், தொடர்ந்தார். 

-விளம்பரம்-
Advertisement