90ஸ் ரசிகர்களின் மிகவும் பிரபலமான சித்தி சீரியலில் ஒரு கல்லூரி பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார் தேவிப்பிரியா அதை தொடர்ந்து பல சீரியல் வில்லியாக நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் காவல் அடைந்தார் இதுவரை இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறார். மேலும், பல திரைப்படங்களில் கூட நடித்து இருக்கிறார். அதே போல இவர் ஒரு சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸட் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த விக்ரம் படத்தில் கூட இவர் நடிக்கும் வாய்ப்பை சிறிய இடைவெளியில் தவறவிட்டார்.
இந்த நிலையில் தான் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு சீரியல் நடிகை தேவிப்பிரியா பேட்டி கொடுத்திருந்தார் அந்த பேட்டியில் பேசும் போது சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கு காரணம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை தேவி பிரியா கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தேவி பிரியா பேட்டி :
அவர் கூறுகையில் ” நியாயமாகச் சொல்லவேண்டும் என்றால் சினிமாவில் நடிப்பதற்கு படுக்கைக்கு அலைக்கும் பழக்கம் இருக்கிறது. அது இல்லை என்று நான் சொல்லமாட்டேன். சினிமாவில சிறிய வேடங்களில் நடிக்க வேண்டும் என்றால் கூட பலருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. படத்திற்கு ஆடிஷன் முடிந்தவுடன் அட்ஜெஸ்ட்மென்ட் என்ற ஓன்று உள்ளே வருகிறது. நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்துவிட்டு மேலும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற நேரத்தில் அவர்கள் இந்த மாதிரியான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
உதறி தள்ளி விடுவேன் :
இது நடிகைகளுக்கு பரவலாக நடக்கிறது. இந்த விஷயத்தை பொறுக்கமுடியாமல் இருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என்று சென்று விடுவார்கள் இல்லையேல் சினிமாவில் இருந்து இருந்த இடம் காணாமல் சென்று விடுவார்கள். ஆனால் இது போன்ற பிரச்னை எனக்கு வந்தது கிடையாது அப்படி யாரது ஒருவர் இந்த நோக்கத்தோடு என்னை அணுகினால் நான் அந்த வாய்ப்பை உதறி தள்ளி விடுவேன் என்று கூறினார்.
வாய்ப்புகள் கிடைக்காது :
வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி, சின்னத்திரையாக இருந்தாலும் சரி, நடிப்புத் திறனைத் தாண்டி, ஒவ்வொரு நடிகையும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கு விளம்பரங்களில் நடிப்பது ஒரு கனவாக இருந்தாலும் இந்த மாதிரியான விஷியங்கள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் அந்த மாதிரியான வாய்ப்புகளை விருப்புபவள் கிடையாது. இந்த காரணத்தினாலேயே எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமலேயே சென்று விட்டது.
நான் மட்டும் கிடையாது :
நான் மட்டும் கிடையாது என்னை போன்ற பல நடிகைகள் இந்த காரணத்தினால் பல வாய்ப்புகளை இழந்திருக்கின்றனர் என்று கூறினார். நடிகை தேவி பிரிய சிரியல்களில் மிகவும் பிரபலமானவர் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் இவரை போன்ற பல நடிகைகளுக்கு சில திரைப்பட வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தற்கு இது காரணமாக இருக்குமா? அல்லது சினிமாவிற்கும் நடிகைகளுக்கு இடையே உள்ள தரகர்களின் வேலையாக இருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.