பிக் பாஸ் பிரபலம் அர்னவின் முன்னாள் மனைவி நடிகை திவ்யா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது அர்னவ்-திவ்யா விவகாரம் தான். இது அனைவரும் அறிந்த ஒன்று. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து இருந்தார்கள். பின் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தனர். திருமணம் ஆகி கொஞ்ச நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதை திவ்யா அறிவித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இப்படி ஒரு நிலையில் அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.
அதோடு அர்னவிற்கு செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறி இருந்தார். மேலும், காவல் துறையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் அர்னவ் தான் என்றும் திவ்யா புகார் கொடுத்து இருந்தார்.
திவ்யா கொடுத்த புகார்:
அதுமட்டும் இல்லாமல் திவ்யா மீதும் அர்னவ் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இப்படி இருவருமே மாற்றி மாற்றி பேட்டி கொடுத்திருந்தார்கள். இதை தொடர்ந்து திவ்யா கொடுத்த புகாரின்பெயரில் போலீசார் அர்னவ் மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து இருந்தார்கள். பின் அர்னவ் ஜாமினில் வெளியில் வந்தார். வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளவே இல்லை.

அர்னவ்-திவ்யா பிரிவு :
இப்படி அர்னவ்-திவ்யா இடையே பிரிவு ஏற்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் செல்லம்மா சீரியலில் ஜோடியாக நடித்த அன்ஷிதா தான் என்று கூறப்பட்டது. இதையடுத்து திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் பெண் குழந்தையைக் கூட, அர்னவ் பார்ப்பதற்கு செல்லவில்லை என்று கூறப்பட்டது. தற்போது அர்னவ் பிக் பாஸ் வீட்டுக்குள் அன்ஷிதாவுடன் ஜோடியாக சென்றுள்ளார். இந்த நிலையில் நடிகை திவ்யா instaவில் ஒரு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
திவ்யா பதிவு:
அதில் அவர், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிருக்கும் வேட்டையன் படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு, எல்லா நல்லதுக்கும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி இவர் கூறியதற்கு காரணம் பிக் பாஸ் வீட்டில் அர்னவ் தன்னை நல்லவராக காண்பித்து நடித்துக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி தான் போட்டு இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
பிக் பாஸ் வீட்டில் அர்னவ்:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாளே அன்ஷிதாவை பார்த்து தெரியாதவர் போல அர்னவ் நடித்தார். அதற்குப்பின் அன்ஷிதாவை அர்னவ் நாமினேஷன் நாமினேசன் செய்திருந்தார். அதற்கு போட்டியாளர்களே
அர்னாவை பார்த்து நடிக்கிறார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். முதல் நாளே சாச்சனா வெளியேறியதற்கு கண்கலங்கி அர்னவ் பேசியிருந்தார். இதை பார்த்து பலருமே, பெத்த பிள்ளையை கூட பார்க்க போக முடியவில்லை. சாச்சனா வெளியேறியதற்கு உனக்கு வருத்தமா? என்று பயங்கரமாக ட்ரோல் செய்திருந்தார்கள். இருந்தும் அர்னவ் பிக் பாஸ் வீட்டில் கவனமாக விளையாட முயற்சி செய்து வருகிறார்.






