5 வயது மகள் இருக்கும் நிலையில் விஜய் டிவி சீரியல் நடிகருடன் ரகசிய இரண்டாம் திருமணம். கர்ப்பத்தை அறிவித்த செவ்வந்தி சீரியல் 

0
436
divya
- Advertisement -

ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்திருக்கும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆண்டு காலமாக மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக தொலைக்காட்சி சீரியல்கள் திகழ்கிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே சீரியலுக்கு பெயர் போன சேனல் சன் டிவி தான். அந்த அளவிற்கு பல சூப்பர் ஹிட் தொடர்களை சன் டிவி வழங்கி இருக்கிறது. காலை 10 மணியில் தொடங்கி இரவு வரை விடாமல் தொடர்கள் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான தொடர் தான் செவ்வந்தி. 90 களில் தொடர்களிலும், படங்களிலும் கலக்கிய நடிகர் ராகவ் தான் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

நடிகை திவ்யா ஸ்ரீதர் குறித்த தகவல்:

இவர் சினிமா துறையில் நடிகர் மட்டுமல்லாமல் மியூசிக் கம்போஸ்ஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர். நடிகர் ராகவ் ஒரு சிறந்த டான்ஸர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரை அடுத்து சீரியலில் நாயகியாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறார். இவர் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். பல்லக்கு என்னும் கன்னட படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கி இருந்தார். இருந்தாலும், இவருக்கு கன்னட சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பெரும் புகழை சேர்த்தது.

நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிக்கும் சீரியல்:

பின் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் தான் இவர் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து மகராசி என்ற தொடரில் திவ்யா நடித்தார். தற்போது இவர் செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொண்டிருக்கிறது. அதோடு சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் திவ்யாவிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

நடிகை திவ்யா ஸ்ரீதர் திருமணம்:

இவர் திருமணம் செய்து கொண்ட நபரும் சீரியல் நடிகர் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா தொடரின் நாயகன் சித்து என்கிற ஆர்னவ் தான். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். திவ்யாவும், நடிகர் ஆர்ணவும் நீண்ட நாள் காதலர்கள். மேலும், இவர்களுடைய திருமணத்தை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்திருக்கிறார்கள்.

நடிகை திவ்யாவின் முதல் திருமணம்:

இந்நிலையில் திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி பெண் குழந்தை இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது திவ்யா இரண்டாவது திருமணம் தான் செய்து இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் மகள் இருக்கிறார். அவருடைய மகள் பெயர் ஜெய்சனா. ஏற்கனவே திவ்யா தன் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு எனது இளவரசி என்று கூறி இருந்தார். ஆனால், இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? யார் என்று விவரம் எதுவும் தெரியவில்லை.

Advertisement