கோலாகலமாக நடந்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் வளைகாப்பு – குவியும் வாழ்த்துக்கள்

0
118
- Advertisement -

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லாவிற்கு வளைகாப்பு நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். அதிலும் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர். அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார்.
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா. இந்த படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா.

- Advertisement -

கேப்ரில்லா குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த சுந்தரி சீரியலில் நடித்து இருந்தார்.
இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து இருந்தார். அதோடு இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து முடியும் வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சுந்தரி சீரியல்:

எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் என்பதால் நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி இருந்தார். அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. இந்த சீரியல் இரண்டு பாகம் ஒளிபரப்பாகி இருந்தது. கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிந்தது.

-விளம்பரம்-

கேப்ரில்லா கணவர்:

இதற்கிடையில் கேப்ரில்லா அவர்கள் சுருளி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சென்னைக்கு வந்த புதிதில் கேபிரில்லாவிற்கு உறுதுணையாக இருந்தது சுருளி தானாம். அதன் பின் இருவரும் நட்பாக பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகும் கேப்ரில்லாவின் கனவை நிறைவேற்றுவதற்கு சுருளி பக்கபலமாக இருந்திருக்கிறார். இதை அடுத்து கடந்த ஆண்டு இறுதியில் தான் கர்ப்பமாக இருப்பதாக கேப்ரில்லா அறிவித்து இருந்தார்.

கேப்ரில்லா வளைகாப்பு:

மேலும், கேப்ரில்லா அவர்கள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நிறைய போட்டோ சூட் எடுத்திருந்தார். அதை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகை கேப்ரில்லாவுக்கு கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றிருக்கிறது. சின்னத்திரை பிரபலங்கள் பலருமே கேப்ரில்லா வளைகாப்புக்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement