கோலம் அழிஞ்சிடும். இது அழியாதே. குடியுரிமை சட்டம் குறித்து நடிகை ஜெயலக்ஷ்மி பதிவிட்ட புகைப்படம்.

0
5745
Jayalakshmi
- Advertisement -

தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் பலர் வீட்டின் முன்பு கோலம் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் ஒரு சில நபர்கள் கைது செய்யப்பட்டும் இருந்தனர். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மற்றும் ஒரு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி குடியுரிமை சட்டத்திற்கு தனது ஆதரவை மிகவும் வித்யாசமாக தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

இயக்குனர் சேரன் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகர் ஜெயலட்சுமி.  கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, மாயாண்டி குடும்பத்தார், நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் உள்பட ஏராளமான  படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மேலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், பிரியமானவள் போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : விஸ்வாசம் அஜித் ஸ்டைலில் ரஜினி. தலைவர் 168 படத்தின் புதிய அப்டேட்.

- Advertisement -

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தி.நகரில் உள்ள மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொன்னாரைச் சந்தித்துவிட்டு, பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார். இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பலரும் கோலம் போட்டு எதிர்த்து வருபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார் நடிகை ஜெயலக்ஷ்மி. அதில் தனது வீட்டின் கதவில் தனது பெயருக்கு முன்னாள் பி ஜே பி என்று குறிப்பிட்டு அதற்கு கீழ் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கும் விதமாக ‘we Support CAA’ என்று போர்டயும் மாட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், அந்த பதிவில் பிளாட்டில் கோலம் போட்டு #wesupportCAA எழுத இடம் பத்தல்ல.. கோலம் வர அழிஞ்சிடும். இது அழியாதே .ஐடியா எப்படி? supera பெர்மனண்டா ஒரு போர்டு ரெடி செய்து வாசலில் வச்சிட்டோமல்ல என்று குறிப்பிட்டுள்ளார் நடிகை ஜெயலக்ஷ்மி. ஏற்கனவே நடிகை ஜெயலக்ஷ்மி குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், அவ்வாறு தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement