ஒரு நாளைக்கு ரூ 3 லட்சம்.! விபச்சாரத்துக்கு அழைத்த நபர்.! கைதுசெய்த போலீஸ்.! புகைப்படம் இதோ.!

0
1192

சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நடிகைகளை சம்மந்தபடுத்தி சில பாலியல் தொழில்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியை ,ஆபாச தொழிலில் ஈடுபடுத்த வலைவீசிய இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Actress jayalakshmi

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் நடிகைகளை கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக பிரபல தெலுங்கு பட தயரிப்பாளர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழ் சீரியல் நடிகை ஜெயலட்சுமியும் இது போன்ற ஒரு தொல்லையை சந்தித்துள்ளார். சமீபத்தில் அவரது செல்போனில் ஒரு வாட்சப் மெசேஜ் வந்துள்ளது.

அந்த மெசேஜில் தாங்கள் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் நீங்கள் அரசியல் பிரமுகர்கள், விஐபி, விவிஐபியுடன் நீங்கள் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொண்டால் நீங்கள் பல ஆயிரம் வரை சம்பித்தகாலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை ஜெயலட்சுமி.

-விளம்பரம்-

jayalakshmi

இதையடுத்து நடிகை ஜெயலட்சுமி மூலம் அந்த மெசேஜ்களை அனுப்பிய அந்த மர்ம நபர்களை பிடிக்க திட்டம் தீட்டிய காவல் துறையினர், சமீபத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், இந்த மெசேஜை யாருக்கெல்லாம் அனுப்பினார்கள், இந்த செயலில் வேறு எதாவது பிரபலங்கள் சம்மந்தபட்டுள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement