ஜெய்ஸ்ரீயின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா. முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ.

0
208345
jayshree
- Advertisement -

சில வாரங்களாகவே சீரியல் நடிகை ஜெயஸ்ரீயும், நடிகர் ஈஸ்வர் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு பெரிய அதிர்ச்சியை வெளியிட்டு உள்ளார்கள். அது என்னவென்றால் ஜெயஸ்ரீயின் முதல் கணவர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்கள். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மகாலட்சுமிக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் கணவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக ஜெயஸ்ரீ புகார் அளித்து உள்ளார்.

-விளம்பரம்-

- Advertisement -

இதனால் ஜெயஸ்ரீ கணவர் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தார்கள். இது எல்லாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரித்து பின்னர் விடுவித்தனர். தற்போது ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் மாத்தி மாத்தி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது என கூறுகிறார்கள். ஜெயஸ்ரீயின் கணவர் மதன் என்பவர் தான். மேலும், மதன் ஜெயஸ்ரீ குழந்தை ரேவாவுடன் குழந்தையிலிருந்து இருக்கும் போது எடுக்கப் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதோடு ரேவாவை கொஞ்சுவதும், அவளுடன் பல இடங்களில் சுற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிட்டு உள்ளார்கள்.

இதையும் பாருங்க : 7 வருடத்திற்கு முன் விஜய் சேதுபதியை சந்திக்க 2 மணி நேரம் காத்திருந்த லோகேஷ் கனகராஜ். பின்னர் நடந்த அதிசயம்.

தற்போது ஜெயஸ்ரீயின் முதல் கணவரது புகைப்படம் இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. அப்ப இவர் தான் உண்மையான கணவரா?? என்றும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். . இந்நிலையில் ஜெயஸ்ரீயும் செய்தி இணையத்திற்கு பேட்டி அளித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியது, என் கணவருக்கும், அவர் நடித்து வரும் தேவதையை கண்டேன் சீரியலில் நடிக்கும் நடிகை மகாலக்ஷிமிக்கும் தொடர்பு உள்ளது. அதைப் பற்றி என்னிடம் பலர் கூறினார்கள். வீட்டிலேயே தினமும் அவளிடம் போனில் பேசுவது, அவளுடைய குழந்தையை அப்பா என்று கூப்பிடுவது, அவளை பப்புன்னு கொஞ்சுவது என பல விஷயங்களை என் கண் முன்னாடியே செய்து வந்தார்கள். மேலும், இது குறித்து என் கணவரிடம் பேசிய போது நாங்கள் நட்பாக தான் பழகி வருகிறோம் என்று கூறினார். பின் எங்கள் இருவருக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு அவர் என்னை அடித்து உதைத்து கொடுமைப் படுத்தினார். அதோடு நான் மகாலட்சுமியை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசினேன்.

-விளம்பரம்-

என் புருஷனை விட்டு விடு என்ற ஒரு காலில் விழாத குறையாக கேட்டேன். அதற்கு அவளும் நாங்கள் நட்பாகத் தான் பழகுகிறேன் என்று கூறினாள். பின் ஈஸ்வர் அவள் தான் என் வாழ்க்கை என்றும், வீட்டை விட்டு வெளியே போ என்றும், எனக்கு விவாகரத்து கொடு என்று ஆறு மாதமாக பிரச்சனை செய்து வருகிறார். இதனால் என் மகள் அவரிடம் பேசவே இல்லை என்று ஜெயஸ்ரீ மன வேதனையுடன் கூறினார். இந்த செய்தி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சமூக வலைத்தளங்களில் ஜெயஸ்ரீ விவகாரம் தான் பெரியதாக போய்க் கொண்டுள்ளது என்றும் சொல்லலாம்.

Advertisement