பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி புதிதாக கார் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த தொடர்களில் ஒன்று தான் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றது.
இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத், கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். அதேபோல் இந்த சீரியலில் நடித்த சில நடிகர்கள் சினிமாவில் பிசியாக நடித்த கொண்டிருக்கிறார்கள். மேலும், பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லியாகவும், தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ‘கண்மணி மனோகரன்’. இவர் ஆரம்பத்தில் சீரியலில் வில்லத்தனங்கள் செய்து பின் பாசிட்டிவாக இவருடைய கதாபாத்திரம் மாறி இருந்தது.
கண்மணி நடித்த சீரியல்கள்:
இந்த சீரியலின் மூலம் தான் கண்மணி மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இருந்தும் இந்த சீரியலில் இருந்து இவர் பாதியிலேயே விலகிவிட்டார். அதன் பிறகு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ‘அமுதாவும் அன்னலட்சுமி’ என்ற தொடரில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த சீரியலும் முடிந்தது. அதற்கு பின் இவர் பெரிதாக எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. அதோடு இவர் சினிமாவில் முயற்சித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கண்மணி காதல்:
தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார். இதனிடையே நடிகை கண்மணி அவர்கள் சன் டிவி தொகுப்பாளர் ‘அஸ்வத்’ என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார். பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக அஸ்வத் திகழ்கிறார். இவர் சன் டிவியில் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதற்கு பின் இவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
கண்மணி-அஸ்வத் திருமணம்:
மேலும், இவர் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப்சீரிஸில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கி தந்திருந்தது. இதை தொடர்ந்தும் இவர் நிகழ்ச்சிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் கண்மணி-அஸ்வத் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது. அதன் பின் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக மகாபலிபுரத்தில் நடைபெற்றிருந்தது.
கண்மணி வாங்கிய புது கார்:
இந்த திருமண விழாவில் வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்ந்திருந்தார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் திருமணத்திற்குப் பிறகு கண்மணி- அஸ்வத் இருவரும் சேர்ந்து புதிதாக கார் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது கண்மணி புதிய கார் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். காதலர் தினத்தை ஒட்டி தன்னுடைய கணவர் அஸ்வத்துக்கு கண்மணி காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.