நடிகை திரிஷா, வயது 35. தென்னிந்திய திரை நடிகை. திரையுலகில் அறிமுகமாகி கிட்டதட்ட 20 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார். அச்சு அசலாக நடிகை திரிஷாவை போலவே ஒரு தொலைக்காட்சி தொடர் நடிகை உள்ளார்.
அது வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெய் ஹனுமான்’ பக்தி தொடரில் வரும் நடிகை பர்கா பிஷ்ட் சென்குப்தா தான்.
இவர் “ஜெய் ஹனுமான்” எனும் பிரபல தொலைக்காட்சி தொடரில் அஞ்சனை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் பார்க்க அச்சு அசலாக நடிகை திரிஷா போலவே உள்ளார். 39 வயதாகியும் ஸ்லிம்மாக மிகவும் அழகாக உள்ளார்., கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த நடிகை பர்கா பிஷ்ட் சென்குப்தா 2005ஆம் ஆண்டு முதல் ஹிந்தி மற்றும் வங்காள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஹிந்தி மற்றும் வங்காள மொழி படங்களில் நடித்து வரும் நடிகை பர்கா பிஷ்ட் சென்குப்தா தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் “பி.எம் நரேந்திர மோதி” என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.