4வது கணவருடன் இணைந்து வீட்டில் சாராயம் காய்ச்சிய சீரியல் நடிகை. கஞ்சு காச்சிய போலீஸ்.

0
1060
manju
- Advertisement -

கொரோனாவின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடு இல்லை. இதனால் மக்களும், அரசாங்கமும் கவலையில் உள்ளார்கள். கொரோனா பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பல பேர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் அனைத்து கடைகள் போக்குவரத்து என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
kerala

மேலும், கொரோனா காரணமாக மது கடைகள் எல்லாம் மூடப்பட்டதால் பல குடிமகன்கள் தத்தளித்து வந்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்க நீதிமன்றம் உத்தரவு போட்டு உள்ளது. ஒவ்வொரு மாநிலம் அரசாங்க விதிமுறையின்படி மதுக்கடைகளை திறக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட ஒரு சில இடங்களில் மது கடைகளை திறக்கக் கூடாது என்றும் கூறினார்கள்.

- Advertisement -

இந்நிலையில் கேரள மாநிலத்தில் மது கடைகளை திறக்கக் கூடாது என்று கேரள அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் மது கிடைக்காமல் குடிமகன்கள் தவித்து வந்துள்ளார்கள். இதை ஒரு சில பேர் பயன்படுத்திக் கொண்டு கள்ளசாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார்கள். இதனால் நாளுக்கு நாள் கல்லசாராயம் விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மலையாள டிவி நடிகை மஞ்சு சீனி என்பவர் தன்னுடைய வீட்டிலேயே நாலாவது கணவருடன் சாராயம் காய்ச்சி விற்று உள்ளார். இதை அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பின் போலீசார் மஞ்சு சினி வீட்டில் சோதனை நடத்தினர். பின்பு 10 ஆயிரம் மதிப்பிலான 75 லிட்டர் சாராயம் உருவாக்க தேவையான உபகரணங்கள் எல்லாம் கண்டு எடுத்தனர். அதோடு மஞ்சு சீனியின் கணவர் விஷாக் மீது இரண்டு வருடங்களுக்கு முன்பு கொலை வழக்கு இருந்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. லாக் டவுன் நேரத்தில் சினிமாத்துறை மூடியிருப்பதால் பணத்திற்காக இந்த தொழிலை செய்ததாக போலீஸ் விசாரணையில் மஞ்சு சினி தெரிவித்துள்ளார். பின் இவர்கள் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement