நிலானியின் இரண்டு குழந்தைகள் இவர்கள் தான்.! வெளிவந்த ரகசிய புகைப்படம்.!

0
968
Nilani-Actress

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சீரியல் நடிகை நிலானியால், காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நடிகையான நிலானி பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக நிலானிக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.

 

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது பழக்கமும் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால், சில பல காரணத்தால் நிலானி, காந்தி லலித்குமாரிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காந்தி லலித்குமார் தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை காந்தி லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இந்த சம்பவத்தையடுத்து காவல் துறையினர் நிலானி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளது. இதில் முதற்கட்ட விசாரணையில் சீரியல் நடிகை நிலானி ஏற்கனவே திருமணமானவர் என்று திடுக்கிடும் தகவல் தெரியவந்துளளது.

Nilani-1

காந்தி லலித்குமாரின், தற்கொலையை பற்றி விசாரிக்க சென்னை வளசரவாக்கத்திலுள்ள நிலானியின் வீட்டிற்கு இன்று போலீசார் சென்றுள்ளனர். ஆனால், அங்கு நிலானி இல்லை, அவரது வீட்டில் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருந்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் நடிகை நிலானிக்கு ஏற்கணமே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.